1. Home
  2. ஆரோக்கியம்

பெண் கை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள் : எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...!!

1

பெண்ணின் உள்ளங்கையில் மச்சம் இருந்தால் அவர்கள் தேவையில்லாததை பேசி நல்லவர்களைப் பகைத்துக்கொள்வார்கள். இவர்களின் வாழ்க்கை முற்பகுதியை விட பிற்பகுதி நன்றாக இருக்கும்.

பெண்ணின் இடது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் அவர் பழகுவதற்கு இனிமையானவராக இருப்பார்கள். மேலும் அவர் வாழ்வில் துன்பங்களை சந்திக்க நேரலாம். அதனால் அதிக அனுபவசாலியாக இருப்பார்கள்.

பெண்ணின் மணிக்கட்டின் நடுவில் மச்சம் இருந்தால் வாழ்க்கையில் ஒரு கட்டத்திற்குப் பிறகு கையில் பணம் சரளமாக புரளும். கலைகளில் விருப்பம் இருக்கும்.

பெண்ணின் வலது புறங்கையில் மச்சம் இருந்தால் அவர் மற்றவர்களிடம் நட்புடன் பழக விரும்புவார்கள்.

பெண்ணின் இடது புறங்கையில் மச்சம் இருந்தால் அவர்கள் பலரிடம் விரோதத்தை வளர்த்து கொள்வார்கள்.

பெண்ணின் வலது கை சுண்டு விரலில் மச்சம் இருந்தால் அவர் பார்பதற்கு அப்பாவித்தனமாக காட்சியளிப்பார்கள்.

பெண்ணின் இடது கை சுண்டு விரலில் மச்சம் இருந்தால் அவரின் வாழ்க்கை வசதி நிறைந்ததாக அமையும்.

பெண்ணின் வலது கை மோதிர விரலில் மச்சம் இருந்தால் அவர் மற்றவர்களிடம் எச்சரிக்கை உணர்வுடன் பழகுவார்கள்.

பெண்ணின் இடது கை மோதிர விரலில் மச்சம் இருந்தால் அவருக்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும்.

பெண்ணின் வலது கை ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால் அவர் யாரையும் சரியாகப் புரிந்து கொள்ளமாட்டார்கள்.

பெண்ணின் இடது கை ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால் அவர் யாரையும் ஏமாற்றாத குணம் கொண்டவர்களாக இருப்பார்.

பெண்ணின் வலது கை கட்டை விரலில் மச்சம் இருந்தால் அவர்கள் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும்.

பெண்ணின் இடது கை கட்டை விரலில் மச்சம் இருந்தால் அவர் மற்றவர்களிடம் நேர்மையுடன் நடந்துகொள்வார்கள்.

பெண்ணின் இடது கை நடுவிரலில் மச்சம் இருந்தால் அவருக்கு தெய்வ பக்தி அதிகமாக இருக்கும்.

பெண்களின் இடது முழங்கையில் மச்சம் இருந்தால் அவர்கள் மிகுந்த திறமையும், தைரியசாலியாகவும் இருப்பார்கள். இதனால் அசட்டு தைரியமும் இருக்கலாம்.

பெண்ணின் இடது பக்க தோளில் மச்சம் இருந்தால் அவருக்கு நிறைய சொத்துகள் இருக்கும். இவருக்கு பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இருக்கும்.

பெண்ணின் உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவரின் குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். கலாரசனை மற்றும் சிறந்த நிர்வாகியாக இருப்பார்.

Trending News

Latest News

You May Like