உச்சி முதல் பாதம் வரை நன்மை தரும் பலா !
பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது. இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, சி , பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, நையாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

முக்கனிகளில் ஒன்றான பலா , பழங்களின் அரசன் என்றழைக்கப்படுகிறது. இதற்கு அப்பழத்தின் தோற்றம் மட்டுமல்ல , பலா பயக்கும் எண்ணற்ற நன்மைகளும் காரணமாகும்.. பலா மரங்கள் இந்தியா, பர்மா. இலங்கை, சீனா. மலேசியா. பிலிப்பைன்ஸ். பிரேசில், கென்யா போன்ற நாடுகளில் பெருமளவில் உள்ளன.
பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது. இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, சி , பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, நையாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
1. பொட்டாசியம் , இரும்பு சத்து அதிகம் இருப்பதால் , இதய நோய் மற்றும் அனிமியா எனப்படும் ரத்தசோகை வராமல் தடுகிறது.
2. இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு குணமாகும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
3. ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இதன் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா காணமல் போகும்.
4. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானக் கோளாறு , கண்களில் ஏற்படும் குறைபாடு போன்றவற்றை சரிசெய்யும்.
5. குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது. இதனை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால் , இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.
8. பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதலால் ஏற்படும் மோசமான விளைவுகளை தடுக்கும் அருமருந்து.
9. நெய் அல்லது தேன் கலந்த பலாப்பழத்தைச் சாப்பிட்டால் மூளை வளர்ச்சியடையும் , நரம்புகளும் வலுப்படும்.
10. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது பலாப்பழம்.
பின் குறிப்பு:
பலாப்பழம் சாப்பிடுவதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம் . ஆகையால் பலாப்பழத்தை சாப்பிட்ட உடன், சிறிது நெய் அல்லது கொஞ்சம் பாலை அருந்தினால் எந்த தொல்லைகளும் ஏற்படாது.
newstm.in