1. Home
  2. ஆரோக்கியம்

நன்மை தரும் நாட்டு சர்க்கரை

நன்மை தரும் நாட்டு சர்க்கரை

ஸ்வீட் எடு கொண்டாடு என்று தான் எல்லா நாட்களிலும் இனிப்புகளை களிப்போடு சாப்பிடுகிறோம். அந்த இனிப்புகள் உடலுக்கு இனிப்புகளைத் தராமல்ஆரோக்யத்தைப்பதம்பார்த்துக்கொண்டிருக்கிறது.ஆனாலும் சிலந்திவலையில்சிக்குண்டதுபோல்மாட்டிக்கொண்டிருக்கிறோம் வெள்ளை சர்க்கரையில்.

வெள்ளை சர்க்கரைப் போன்று இனிப்பையும் கொடுத்து உடல் ஆரோக்யத்தையும் காக்கும் நாட்டுச்சர்க்கரையே நம் முன்னோர்களின் காலத்தில் புழக்கத்தில் இருந்தது. பொதுவாக வெல்லத்தில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் அதிகமிருக்கிறது ஆனால் அதனினும் அதிக சத்து நாட்டுச் சர்க்கரையில் இருக்கிறது.

மன்னர்கள் காலத்திலேயே மக்கள் இனிப்புகளை அதிகம்விரும்பி எடுத்துக்கொண்டதாக வரலாறு கூறுகிறது. அதோடு அந்த இனிப்புகள் தயாரிக்க பனை வெல்லம்,தேன் முதலானவற்றைப் பயன்படுத்தியாகவும் குறிப்பிடுகிறது. அதுவரைஆரோக்யம் காக்கப்பட்ட நம் மூதாதையர்களின் காலத் துக்குப் பிறகு இடையில் வந்த பள பள வெள்ளை சர்க்கரை ஆரோக்யத்தை சீரழித்துவிட்டது.

கரும்பைச் சாறாக்கி பாகு காய்ச்சும் போது, அவை குறிப்பிட்ட கொதிநிலையை அடையும் போது வெல்லம் அச்சு மற்றும் உருண்டை வடிவில் மாற்றம் அடைந்து பிறகு பிரவுன் நிறத்தில் கிடைக்கும் பொருளே நாட்டுச்சர்க்கரை எனப்படும் கரும்பு சர்க்கரை.

இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் வேலையைச் செவ்வனே செய்கிறது. இனிப்பு உணவுகள் குடல் இயக்கங்க ளின் பணியை குறைத்து மலச்சிக்கலை உண்டாக்கும். ஆனால் நாட்டு சர்க்கரை குடலுக்கு வலுவூட்டி குடல் இயக்கங்களை துரிதப்படுத்தும். இத னால் மலச்சிக்கல் பிரச்னையும் நீங்கிவிடும்.நுரையீரல் சம்பந்தமான நோய்களை நாட்டுசர்க்கரை குணப்படுத்துவதாக ஆய்வு ஒன்று கண்டறிந் துள்ளது.

செரிமானக் கோளாறுகளால் அவதியுறுபவர்கள் சாப்பிட்டு முடித்ததும் அரை டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரையை வாயில் போட்டு உமிழ் நீர் கலந்து சாறு விழுங்கினால் செரிமானம் எளிதாகும். நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துவருகிறது. ஆனால் இன் சுலின் சுரப்பை அதிகரித்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த நாட்டு சர்க்கரை உதவுகிறது.

வெள்ளை சர்க்கரை போன்று வேதிப்பொருள்கள் கலக்காமல் தயாரிக்கப்படும் நாட்டுசர்க்கரையை வருடக்கணக்கில் வைத்து பயன்படுத்தலாம். டீ, காபி தயாரிக்கும் போது வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக இதைப் பயன்படுத்தலாம். இனிப்பு கலந்த நொறுக்குத்தீனிகள் செய்யும் போதும் வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் நாட்டுச் சர்க்கரை பயன்படுத்துவது நல்லது. ருசியில் மாற்றம் இருக்காது. நிறத்தில் சற்றே மாறுபடும், நாட்டுச் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் இனிப்புகளை குழந்தைகளுக்கு பழக்கினால் உடல் வலிமை அதிகரித்து சத்து குறைபாடின்றி வளர்வார்கள்.

பளபளப்பை நாடாமல் பலம் தரும் உணவை தேடி செல்வோம்.


newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like