உஷார்..! இந்த மீனை சாப்பிடுவர்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுமாம்..!

தேள்போன்றும் கவ்வும் உறுப்பு கொண்ட மீன் வகையை சேர்ந்தது தான் தேளி மீன். இது ஒரு அடிக்கு மேல் வளரக் கூடியது. ஈய வெண்மை நிறமுடைய இது விஷமீன் வகையை சேர்ந்தது .
இதனை பூனை மீன், மொய் மீன், பூ விரால், தேளி விரால், ஆப்பிரிக்க கெளுத்தி , தேளி, மீசை மீன் என பல பெயர்களில் அழைக்கப்பட்டு பல ஊர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இம்மீன் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட அயல்நாட்டு மீன் வகையாகும். இது இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அசைவ உணவை மட்டுமே உண்ணும் இம்மீன் இந்தியாவில் தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக விற்கப்படுகிறது.
கோழி கழிவுகள், செத்த நாய்கள் என எல்லா இறந்த மற்றும் அழிகிய உயிரினங்களை தீவனமாக போட்டு வளர்கின்றனர். மேலும் இந்த மீன்கள் மாமிச பட்சிணியாக இருப்பதால் குளத்தில் இயற்கையாகவே இருக்கும் புழு பூச்சிகளை உண்கின்றன.
அதுமட்டுமல்லாமல் பாரம்பரியமிக்க சுவையான மீன் வகைகளான அயிரை, சிறு கெண்டை வகைகள், கெளிறு, உழுவை போன்ற மக்கள் விரும்பும் மீன் இனங்களையும் அழிக்கின்றன.
இதன் விளைவாக மனிதர்கள் மட்டுமின்றி அதனை விரும்பி உண்ணும் நீர்ப்பறவைகளுக்கும் பாதிப்பை உருவாக்குகின்றன. இதனால் மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தை அடைகின்றனர். மேலும் மீன் உற்பத்தியும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.
தேளி மீன்கள் மற்றவைப்போல் அல்லாமல் நீண்ட நாள் உயிர் வாழும் தன்மை கொண்டது. நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிய பிறகும் வண்டல் மண்ணுக்கு அடியில் சென்று காற்றை சுவாசித்து பல மாதங்கள் மயங்கிய நிலையில் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மீண்டும் மழை பெய்து குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வந்ததும் மண்ணுக்குள் புதைந்திருந்த தேளி மீன்கள், வழக்கம்போல குளத்தில் வாழ ஆரம்பித்து விடுகிறது. ஒரு கெளுத்தி மீன் ஒரு ஆண்டில் பல ஆயிரம் குஞ்சுகளை உற்பத்தி செய்கிறது.
இதனால் அவை குளங்களில் பெருகி உள்ளூர் மீன்கள் உற்பத்தியை தடுப்பதுடன் பொருளாதார சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
மேலும் குறிகிய காலத்தில் குறைந்த செலவில் கொழுத்து அதிக எடை பெரிதாய் வளரும் இம்மீன் பல இடங்களில் மீன் கடைகளில் கடல் கெளுத்தி என்ற பெயரில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
உடலுக்கு ஏற்படுத்தும் தீமைகள் :
இந்த மீனை பற்றி அறியாமல் பல மீன் பிரியர்களும் சாப்பிட்டு வருகின்றனர். இம்மீனை சாப்பிடுவர்களுக்கு ஆண்மை குறைவு , இதய நோய், புற்று நோய், தோல் நோய் போன்ற நோய்கள் ஏற்படுவதாக பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.