வாழைப்பூ...பெண்களுக்கு வரப்பிரசாதம்!

குழந்தையின்மையால் மனவேதனைக்கு ஆளாவோருக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

வாழைப்பூ...பெண்களுக்கு வரப்பிரசாதம்!
X

நம் உடலுக்கு நன்மையளிக்கும் பொருட்களில் வாழைப்பூவும் ஒன்றாகும். பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்ல பலமளிக்க இது உகந்தது. மாதத்தில் இரண்டு -மூன்று நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இதில்
துவர்ப்பு தன்மை இருப்பாதால் உடம்புக்கு ‘பி’ விட்டமின் கிடைக்கிறது.

வாழைப்பூவின் நன்மைகள்:

* மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும்.

* வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

*சிலர் குழந்தையின்மையால் மன வேதனைக்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

* சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

வாழைப்பூ...பெண்களுக்கு வரப்பிரசாதம்!

வாழைப்பூவில் செய்யும் ருசியான உணவில் வாழைப்பூ வடையும் ஒன்று. இதனை பெரியவர் முதல் குழந்தைகள் வரை விரும்பி உண்பர். இதனை எவ்வாறு சமைப்பது..

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1

கடலைப்பருப்பு - 1 கப்

காய்ந்தமிளகாய் - 2

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

சோம்பு - 1 டீஸ்பூன்

பச்சை மிள்காய் -2

கறிவேப்பில்லை-1 கொத்து

இஞ்சி - ஒரு சிறுதுண்டு

உப்பு தேவையான அளவு

எண்ணெய் வடை பொரிப்பதற்கு..

வாழைப்பூவை சுத்தம் செய்யும் முறை:

வாழைப்பூவை பிரித்து உள்ளிருக்கும் சிறு சிறு பூக்களை எடுத்து கொள்ள வேண்டும். அதனுள் இருக்கும் வெள்ளை நிற நரம்பை தனியாக எடுத்து விடவும். பின்னர் , ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு சுத்தமான தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து ஒரிரு நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிட்டு கீழே இறக்கி, நீரை ஒட்ட வடித்துவிட்டு ஆற வைக்கவும். பின்னர் நன்றாக பிழிந்தெடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாழைப்பூ...பெண்களுக்கு வரப்பிரசாதம்!

செய்முறை:

கடலைப்பருப்பை, தனியாக எடுத்து மூன்று மணி நேரம் ஊறவைத்து மாவாக்கி கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சுத்தம் செய்து வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து பிசைந்து வடை போல தட்டி சூடான எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும் . ஆரோக்கியமான வாழைப்பூ வடை தயார்!

newstm.in

newstm.in

Next Story
Share it