முதுகு வலி: காரணங்களும் , தீர்வுகளும்

பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்றவற்றை தினமும் நம் உணவுகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகள் போன்றவற்றை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்

முதுகு வலி: காரணங்களும் , தீர்வுகளும்
X

முதுகில் வலி ஏற்படுவது, ஏதோ ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம் . முதுகுப் பகுதியைச் சார்ந்த எலும்புகள், தசைகள், தசைநாண்கள், இடைவட்டு ஆகியவற்றில் ஏற்படுகிற பிரச்சினைகள் கூட கீழ் முதுகு வலிக்கு காரணங்களாகச் இருக்கலாம்.

முதுகெலும்பு நேராக இல்லாத நிலையில் உட்காருவது, தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது, இரு சக்கர வாகனத்தில் நெடும் தூரம் பயணிப்பது, அதிக எடையுள்ள பொருள்களை தூக்குவது போன்றவைகளும் முதுகு வலிக்கு காரணங்களாக இருக்க கூடும்.

கீழ் முதுகு வலிக்கு பெரும்பாலும் முதுகெலும்பில் ஏற்படும் பிரச்சைனையாகத்தான் இருக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பையில் கல் உள்ளவர்களுக்குக் கீழ் முதுகில் வலி ஆரம்பித்து, முன் வயிறு வரை வலி ஏற்படும். வெள்ளைப்படுதல் பிரச்சினை உள்ள பெண்களுக்குக் கீழ் முதுகில் முதலில் வலி தொடங்கும்.

முதுகு வலி: காரணங்களும் , தீர்வுகளும்

முதுமை காரணமாகவும், கால்சியம் சத்து குறைபாட்டினாலும் முதுகு பகுதியில் வலி ஏற்படலாம். இடைவட்டு விலகல் மற்றும் முதுகு முள்ளெலும்புகளின் பின்புறமுள்ள அசையும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவதால், நரம்பு முறையாக இயங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் முதுகு பகுதியில் வலி ஏற்படலாம்.

முதுகு வலி நீங்க வீட்டு மருத்துவம்:

முதுகு வலி: காரணங்களும் , தீர்வுகளும்

பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்றவற்றை தினமும் நம் உணவுகளில் பயன்படுத்த வேண்டும். கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகள் போன்றவற்றை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்.

ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம். இதைத் தவிற வைட்டமின் ஏ, வைட்டமின், சி, வைட்டமின் கே ஆகியன எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவையாகும்.

வலி ஏற்படும் நேரத்தில் சூடான நீரில் குளிப்பதன் மூலம் வலியை குறைக்கலாம். மேலும் வாரம் ஒரு நாள் கடுகு எண்ணையில் மசாஜ் செய்து கொள்ள வேண்டும். முதுகிற்கான ஆசனங்களை செய்வதன் மூலம் நல்ல பலனை அடைய முடியும்.

newstm.in

Next Story
Share it