ஆயா சுட்ட பீட்ஸா- ஆரோக்ய அடை...

பலவீடுகளில் அடை என்ற பெயரில் தோசையை ஊற்றுகிறார்கள். ஆனால் பாட்டி கால சத்து அடை எப்படியிருக்கும் தெரியுமா? அகன்ற இரும்பு வாணலியில் மொத்தமாக பரும னாக ஊற்றப்படும் அடையை அடுப்பில் மிதமா னத் தீயில் வைத்து நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பி போட்டு...

ஆயா சுட்ட பீட்ஸா- ஆரோக்ய அடை...
X

பீட்ஸா படத்தில் ஒரு டயலாக் வரும். கடை பீட்ஸாவை விட நம்ம ஆயா சுட்ட பீட்ஸா தோசையே சூப்பரா இருக்குடா என்று சொல்லும் சின்னக் குழந்தைகள் தற்போது பெருகிவிட்டார்கள்.அப்படியான பெருமை வீட்டு இல்லத்தரசிகளையே சாரும். இப்போதும் பாருங்கள் பாரம்பரிய சமை யல் என்று சொல்லும்போதே வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு சில நொடியாவது மனமும், நாவும் மயங்கவே செய்யும்.

இன்றைய சூழலில் இளைய தலைமுறையினருக்கு அடை என்றால் கேழ்வரகு அடை மட்டுமே தெரிந்ததாக இருக்கிறது. ஆனால் எளிமையாக செய்யக்கூடிய பலவிதமான பலகாரங்கள் பாரம்பரிய சமையலில் இருக்கிறது அவற்றில் ஒன்று சத்துஅடை. மெனக்கெட தேவையில்லாத எளி மையான முறையில் செய்யக்கூடிய இந்தப் பலகாரங்களை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்…

இன்று நாம் பார்க்கவிருப்பது சத்துக்களையும் சுவையையும் சேர்த்துக்கொடுக்கும் தவளை அடை…இப்போது பலவீடுகளில் அடை என்ற பெய ரில் தோசையை ஊற்றுகிறார்கள். ஆனால் பாட்டி கால சத்து அடை எப்படியிருக்கும் தெரியுமா? அகன்ற இரும்பு வாணலியில் மொத்தமாக பரும னாக ஊற்றப்படும் அடையை அடுப்பில் மிதமானத்தீயில் வைத்து நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பி போட்டு நன்றாக வேகவைத்து மொறு மொறு வென்று சிவக்க வேகவைத்து எடுத்து அதைத் துண்டுகளாக்கி சாப்பிடுவார்கள். பருப்பு அடை, தானிய அடை, அரிசி மாவு அடை, கம்பு அடை என பலவகைகளும் இப்படித்தான் இருக்கும். இன்று தவளை அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தவளை அடை:
தேவைக்கு: க.பருப்பு, உ,பருப்பு, து,பருப்பு- தலா 1 தேக்கரண்டி, கறுப்பு மூக்கடலை, வெள்ளைக் மூக்கடலை – தலா அரை தேக்கரண்டி. பாசிப் பருப்பு – கால் தேக்கரண்டி, பச்சரிசி, புழுங்கலரிசி – தலா 1 ஆழாக்கு, நறுக்கிய சாம்பார் வெங்காயம் –1கப், சோம்பு- 2 டீஸ்பூன், வரமிளகாய் – காரத்துக்கேற்ப, பூண்டு -10 பல், மெல்லிய தாக சீவி நறுக்கிய கொப்பரைத் தேங்காய்த் துண்டுகள் – சிறிய கப், கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா தழை, உப்பு, நல்லெண்ணெய் அல்லது ரீபைண்டு ஆயில் –தேவைக்கேற்ப.

செய்முறை:
அடை செய்வதற்கு 8 மணிநேரம் முன்பு கொண்டைக் மூக்கடலை, வெள்ளை மூக்கடலையைச் சேர்த்து ஊறவைக்கவும். அரைப்பதற்கு மூன்று மணிநேரம் முன்பு பாசிப்பருப்பு, க.பருப்பு, உ.பருப்பு, து.பருப்பு- சுத்தம் செய்து சேர்த்தே ஊறவைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் பச்சரிசி, புழுங்கலரி சி யையும் சேர்த்து ஊற வைக்கவும்.

மூக்கடலை வகையை ஒன்றிரண்டாக (தேவையெனில் சற்று கரகரப்பாகவும்) அரைத்து எடுத்து அகன்ற பாத்திரத்தில் வைக்கவும்.பருப்புகளை நொய் பதத்துக்கு அரைத்து மூக்கடலை விழுது பாத்திரத்தில் சேர்க்கவும். இப்போது இறுதியாக அரிசியையும், சோம்பு, வரமிளாயையும் சேர்த்து ரவைபோல் அரைத்து அதே பாத்திரத்தில் நன்றாக கலந்து உப்பு சேர்க்கவும்.

வெங்காயம், தேங்காய்த்துண்டுகள்,கறிவேப்பிலை பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன் சேர்த்து வதக்கி மாவில் கொட்டிய பிறகு நறுக்கிய கொத்து மல்லித் தழை, புதினா தழைகளை நறுக்கி சேர்க்கவும். அகலமான அடி கனமான (முன்னோர்கள் பயன்படுத்திய வாணல் இன்னுமே சிறந்தது) வாணலியில் நான்கு கரண்டி மாவை மொத்தமாக ஊற்றி மிதமானத் தீயில்வைத்து, 20 நிமிடங்களுக்குப் பிறகு திருப்பிபோட்டு சிவகக் வைத்து எடுக்கவும். இதற்கு சைட்டிஷ் கெட்டி தேங்காய்ச் சட்னி அல்லது பாகு வெல்லம் ஏற்றது. குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் போல் பள்ளிக்கு கொடுக்கலாம்.

உங்கள் வீட்டில் வாரத்தில் ஒரு நாளாவது அடைகளோடு ஆரோக்யமும் மணக்கட்டும்.

newstm.in

newstm.in

Next Story
Share it