1. Home
  2. ஆரோக்கியம்

ஆடி ஸ்பெஷல்:  உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்

ஆடி ஸ்பெஷல்:  உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்

தேவையான பொருட்கள்:-

கேழ்வரகு மாவு - 1/2 கிலோ

பச்சரிசி நொய் - 200 கிராம்

சின்ன வெங்காயம் - 10

தயிர் - இரண்டு கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

முதலில் கேழ்வரகு மாவு 2 ஸ்பூன் தயிர் சிறிது உப்பு மூன்றையும் 2 டம்ளர் தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் கரைத்து முந்தின நாள் புளிக்க வைக்கவும்.

மறுநாள் குக்கரை அடுப்பில் வைத்து நான்கு அல்லது ஐந்து ஆழாக்கு தண்ணீர் விட்டு பச்சரிசி நொய்யைக் அதில் போட்டு 2 விசில் விட்டு வேகவிடவும்.

நன்கு வெந்தவுடன் புளித்த கேழ்வரகு மாவினைக் கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டு மத்தின் பின்புறத்தினால் கலந்து விடவும். கையில் தண்ணீர் தொட்டு வெந்து விட்டதா என்று பார்க்கும்போது மாவு கையில் ஒட்டாமல் வந்தால் இறக்கி விடவும்.

இதனை இரவில் செய்து வைக்கவும்.

காலையில் அந்தக் கூழினை ஒரு பாத்திரத்தில் போட்டு அளவாகத் தண்ணீர் விட்டு உப்பு, தயிர், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து விடவும் குளுமையான கூழ் தயார்.

newstm.in

Trending News

Latest News

You May Like