உதடுகள் கருப்பாக இருக்கிறதென்ற கவலையா உங்களுக்கு...

கண்களின் மீது வெள்ளரித்துண்டு வைத்து 10 நிமிடங்கள் படுங்கள் கண்கள் அழகாகும்,குளிர்ச்சியுடன் காணப்படும் . தினம் 6 மணி நேரமாவது நன்றாகத் தூங்குங்கள். மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கஸ்தூரி மஞ்சள் மற்றும் பச்சை பயிறை பவுடராக்கி அதனுடன் கோதுமை மாவு மற்றும் கடலை மாவு ஆகியவற்றையும் சேர்த்து பன்னீரில் கலந்து பாதத்தில் பூசவேண்டும். 20 நிமிடம் கழித்து பாதங்களை கழுவினால் அவை பளபளப்பாகும்.
தேங்காய் எண்ணெய் அனைவரது வீட்டிலும் கண்டிப்பாக இருக்கும். தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, உதட்டில் தடவி மசாஜ் செய்து வந்தால், உதட்டின் ஈரப்பசையைத் தங்க வைக்கலாம். நீங்கள் ஒரு நாளைக்கு பல முறை தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம், அது எந்த தீங்கும் செய்யாது. உதட்டுக்கு ஸ்க்ரப் செய்ய விரும்பினால் தேங்காய் எண்ணெய்யுடன் சர்க்கரை சேர்த்து கலந்து உதட்டில் தடவி வரலாம்.
ரோஜா இதழ்கள், எலுமிச்சை சாறு, வேப்பிலை ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். பின்பு மிதமான சூட்டில் கால்களை 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். இதுபோல் செய்துவந்தால் கால்கள் சொரசொரப்பு இன்றி மிருதுவாக மாறும்.
தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சில சோப் எண்ணெயிலுள்ள இரசாயனம், கால்களில் பட்டால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். கடினமான செருப்பு அணிவதாலும் பாத வெடிப்புகள் வரும். சிலர் பாதங்களைச் சுத்தமாக வைத்து கொள்வதில்லை.இதனாலும் பாத வெடிப்புகள் வரும். அதைப் போக்க சில எளிய வழிகள் இதோ:
ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழத் தோலால் பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தைச் சுத்தமாக்கும். மேலும் கிருமிகளையும் ஒழிக்கும்.
வெடிப்பு உள்ள பாதங்களை ஐஸ் கட்டியில் சிறிது நேரம் ஊறவைத்து பின் சந்தனத்தூளை பூசி 10 நிமிடங்கள் கழித்து பாதங்களை அலசவும். இதுபோல் செய்து வந்தால் வெடிப்பு சரியாகும். முகத்திற்கு போடும் ப்ளீச் கிரீம், க்யோலின் பவுடர், ஹைட்ரஜன் பெராக்ஸை டு ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் வீதம் கலந்து கால்களில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் கால்களில் உள்ள அழுக்குகள் நீங்கி சுத்தமாகும்.
கடுகு எண்ணெயை தினமும் கால், கைகளில் தேய்த்துக் கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, தோல் மிருதுவாகும். கடுகு எண்ணெய் வாங்கி சூடாக்கி பாதங்களில் தடவி மசாஜ் செய்து வந்தால் பாதங்கள் அழகாவதுடன் கால்வலி உள்ளவர்களுக்கு கால்வலி நீங்கும். பாத வெடிப்பு அதிகம் உள்ளவர்கள் மருதாணியை அரைத்து பூசி வந்தால் கால்கள் குளிர்ச்சியாக இருப்பதோடு வெடிப்புகள் சரியாகும். மருதாணி தூளுடன் தேயிலைத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும். உருளைக்கிழங்கைக் காய வைத்து தூளாக்கிப் பின் அதை தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும். தொடர்ந்து இப்படி மாறி மாறி செய்து வர, பாதம் மெத்தென்று அழகாகும். வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் அப்பி பின் தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும்.
உதடுகள் கருப்பாக இருக்கிறதென்ற கவலையா உங்களுக்கு வெண்ணெயுடன் ஆரஞ்சுப் பழச்சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் லிப்ஸ்டிக் போடாமலே உங்கள் உதடு அழகாகும்.
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ வளமையாக உள்ளது. இது உதட்டில் உள்ள வறட்சியைத் தடுக்கும் சக்தி கொண்டது. எனவே பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் உதட்டை மசாஜ் செய்து வந்தால், குளிர்காலத்தில் உதட்டில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். தூங்குவதற்கு முன் உங்கள் உதடுகளில் பாதாம் எண்ணெய்யை தடவி விட்டு தூங்கலாம். உங்கள் உதடுகள் கருமையாவதைத் தடுக்க, சில துளிகள் எலுமிச்சை சாற்றை எண்ணெயுடன் கலந்து அப்ளை செய்யலாம். மேலும் சருமத்தை புத்துணர்ச்சி செய்யவும், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்றவும் பாதாம் எண்ணெய் உதவுகிறது.
நீங்கள் கடுகு எண்ணெய்யையும் உதடுகளுக்கு பயன்படுத்தலாம், ஆனால் இது மிகவும் வலுவான வாசனையைக் கொண்டுள்ளது. எனவே விருப்பம் இல்லாதவர்கள் எலுமிச்சை சாறு அல்லது பிற எண்ணெய்யுடன் கலந்தும் கூட பயன்படுத்தலாம்.
தாராளமாக தண்ணீர் குடியுங்கள். உங்கள் கண்ணைச் சுற்றி கருவளையம் ஏற்படாமல் இருக்க இதுவே வழிகேரட் சாறுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் பளிச் முகம் உங்களுடையதுதான்
வேகவைத்த உருளைக்கிழங்கு, மசித்த ஆப்பிள், ஆரஞ்சு பழச்சாறு, கொஞ்சம் சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து உடலெங்கும் பூசி, குளித்து வந்தால் மென்மையான, பொலிவான சருமத்தை பெறலாம்.
கடுகு எண்ணெயை சூடாக்கி பாதங்களில் தடவி பின்னர் இளஞ்சூடான நீரில் கால்களை வைத்திருக்கவும். தொடர்ச்சியாக செய்தால் பாத வெடிப்புகள் மறையும்.