1. Home
  2. ஆரோக்கியம்

இன்று மட்டன் வாங்க போறீங்களா ? அப்போ தலைக்கறி கேட்டு வாங்குங்க...!

1

மட்டனை எப்படி சமைக்கிறோம் என்பதில்தான் ஆரோக்கியம் அடங்கி உள்ளது. குறைவான எண்ணெய்யில் வேக வைத்தோ அல்லது கிரில் செய்தோ அல்லது கிரேவியாகவோ அல்லது சூப்பாகவே செய்து சாப்பிட்டால், சத்துக்கள் வீணாகாமல் கிடைக்கும். ஆனால், மட்டன் சாப்பிடும்போது கண்டிப்பாக, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்..


ஆட்டுக்காலில் சூப் வைத்து குடிப்பது பல நன்மைகளை உடலுக்கு வழங்கும். அதனை உப்புக்கண்டம் போட்டும் சாப்பிடுவார்கள். ஆட்டு குடல், ஈரல், குடல் போன்றவற்றை விரும்பி சாப்பிடுவோர் இருக்கிறார்கள்.கோழி இறைச்சியை சூடு என வெறுக்கும் பலரும் ஆடு இறைச்சியை சாப்பிடுவார்கள். ஆட்டின் மூளை தாது விருத்தியை தரும். கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும். நினைவாற்றலை மேம்படுத்தும். வலிமையான மூளைக்கு நன்மையை ஏற்படுத்தும். ஆட்டின் மூளையை உணவில் சேர்த்துக்கொள்வது கபத்தை நீக்கும். மார்பில் ஏற்படும் புண்களை குணப்படுத்தும். மார்பகத்தின் வலிமையை அதிகரிக்க உதவும். 

இந்த ஆட்டுக்கறியில், ஒரு சிலருக்கு தலைக்கறி மிகவும் பிடித்த உணவாக இருக்கும்.. இட்லி, தோசைக்காக, தேங்காய் பாலில் சமைத்து சாப்பிடுவார்கள்.. சிலர் தேங்காய் ஊற்றாமலும், செய்வார்கள். எப்படி சாப்பிட்டாலும், அதிக சுவையை தரக்கூடியது இந்த தலைக்கறி.

ஆனால், தலைக்கறி பெரும்பாலானோரால் விரும்பப்படுவது இல்லை.. காரணம், அதனை சமைக்கும் பக்குவம் என்பது சற்று சிரமமானது. ஆனால், அதற்குள் நிறைய நன்மைகள் ஒளிந்து கிடக்கின்றன..

ஆடு இயற்கையாக உடலுக்கு குளிர்ச்சி வழங்கும் உணவை சேர்ந்தது. அந்தவகையில், ஆட்டின் தலைக்கறியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலி தீரும்.. இதய கோளாறுகளை நீக்குவதில் தலைக்கறிக்கு முக்கிய இடம் உண்டு என்கிறார்கள்.. அதேபோல,நம்முடைய தலை பகுதியில் இருக்கும் எலும்பு வலுப்படுகிறது.. பார்வை கோளாறுகள் சரியாகும்.. கண்களுக்கு கூடுதல் வலிமை கிடைக்கிறது.

இந்த தலைக்கறியை அளவோடு சாப்பிட்டால் இதயநோய் தீரும் என்கிறார்கள்.. உடல் சூட்டை அகற்றுவதன், சருமத்திற்கு இளமை தரும் பளபளப்பை தரும். குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறியை வீட்டில் பெரியவர்கள் அடிக்கடி செய்து தருவார்கள்.. இது அவர்களின் இடுப்பு வலிக்கு நிவாரணமாக அமைகிறது.. பால் சுரப்பும் அதிகமாக இருக்கும்.. பிறந்த குழந்தைக்கும் தலை சீக்கிரமாக நிற்கவேண்டுமென்று, இந்த ஆட்டுத்தலைக்கறியை குழம்பு செய்து தருவார்கள்.தலை தொடர்பான நோய் இருந்தால் அறவே அற்றுப்போகுமாம். குடலுக்கு பலம் கிடைக்கும். ஆட்டின் கண் சாப்பிட்டால் பார்வை கோளாறு உள்ளவர்களுக்கு பலம் கிடைக்கும். கண் கோளாறுகள் சரியாகும். ஆட்டின் நாக்கு உடல் சூட்டை அகற்றும். சருமத்திற்கு இளமை தரும் பளபளப்பை தரும்.

ஒரு சிலர் ஆட்டின் மூளையை தனியாக வறுத்து சாப்பிடுவார்கள். இதன் சுவையே அலாதியானது. இது மனித மூளைக்கு அதிக சக்தியை கொடுக்கும். கண்கள் குளிர்ச்சி பெறும். புத்தி தெளிவடையும், நினைவாற்றல் அதிகரிக்கும். விந்தணு குறைபாடு உடைய ஆண்கள் இதை சாப்பிட தாது விருத்தி உண்டாகும். இதேபோல் ஆட்டின் குண்டிக்காய் சமைத்து சாப்பிட இடுப்புக்கும் குண்டிக் காய்க்கும் பலம் தரும். இடுப்பு நோய் அகற்றும். தாது விருத்தியாகும். ஆண் குறி பருக்கும்.

கப நோய் பாதிப்புள்ளவர்கள் ஆட்டின் மார்பு பகுதியில் உள்ள கறியை சாப்பிட்டலாம். நெஞ்சு எலும்பு கறியை சமைத்து உண்பதால் மார்புக்கு பலம் கிடைக்கும். மார்பு பகுதியில் உள்ள புண்கள் ஆறும். ஆட்டு இதயம் சாப்பிட்டால் நமது இதயத்திற்கு பலம் கிடைக்கும். மன ஆற்றல் பெருகும்.

ஆட்டின் நுரையீரல் சாப்பிட்டால் உடல் வெப்பம் தணியும், நுரையீரலுக்கு வலு கிடைக்கும். அதேபோல் ஆட்டின் கொழுப்பு இதயத்திற்கு நல்ல பலத்தை தரும். வயிற்றில் உள்ள எந்தவித புண்களையும் ஆற்றும் சக்தி இதற்கு உண்டு. கால், மூட்டு நோவு உள்ளவர்கள் ஆட்டுக்கால் சூப் வைத்து குடிக்கலாம். இதனால் கால்களுக்கு வலிவு கிடைக்கும்.

மது அருந்தி விட்டு, ஆட்டிறைச்சி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது.

Trending News

Latest News

You May Like