1. Home
  2. ஆரோக்கியம்

மட்டன் வாங்க போறீங்களா ? அப்போ இதை படிச்சிட்டு போங்க..!

1

ஆட்டின்இதயம், மூளை, குடல், எலும்பு என தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களுக்கும் நன்மை விளைவிக்கிறது. ஆட்டிறைச்சி சாப்பிடுவதனால் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

ஈரல் : 

ஆட்டு ஈரலில் அவ்வளவு சத்துக்கள் உள்ளது.  இரும்பு மற்றும் வைட்டமின் பி12 சத்துக்கள் மிகுதியாக உள்ளது. உங்கள் வாராந்திர உணவில் மட்டன் ஈரல்லைச் சேர்ப்பது இரத்த சோகையைப் போக்க அல்லது தடுக்க பெரிதளவில் உதவுகிறது. மேலும் உடலுக்கு நல்ல குளிர்ச்சி மிக்கதால் அவை உடல் சூட்டை தணிக்க சிறந்த உணவாகும்.

நெஞ்செலும்பு : 

உடல் நலம் சரியில்லாமல் இருந்தாலும் சரி, சளி பிடித்தாலும் சரி எலும்பு முறிவு ஏற்பட்டாலும் சரி உடனே அனைவரும் சொல்வது ஆட்டின் நெஞ்செலும்பை வாங்கி சூப் வைத்து சாப்பிட்டால் சரி ஆகிவிடும் என்பதுதான். மட்டன் சூப் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல் எலும்பிற்கும் வலு சேர்க்கிறது.

தலைகறி :

ஆட்டின் தலைகறியில் குறைந்த கொழுப்பு மட்டுமே உள்ளது. இரும்புசத்து மற்றும் புரதச் சத்து மிக்கதால் இவை மற்ற சிவப்பு இறைச்சிகளுக்கு சிறந்த மாற்றாக அமைகிறது.

ஆட்டு குடல் :

மட்டன் போட்டி என்றழைக்கப்படும் ஆட்டுக்குடல் பல்வேறு சத்துக்களைக் கொண்டது. ஆட்டுக்குடலில் வைட்டமின் A,B12,D,E மற்றும் K நிறைந்துள்ளது. இவை நம் குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.

ஆட்டு மூளையை சாப்பிட்டால்

இது மனித மூளைக்கு அதிக சக்தியை கொடுக்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.
புத்தி தெளிவடையும், நினைவாற்றல் அதிகரிக்கும்.
விந்தணு குறைபாடு உடைய ஆண்கள் இதை சாப்பிட தாது விருத்தி உண்டாகும்.
கப நோய் பாதிப்புள்ளவர்கள் ஆட்டின் மார்பு பகுதியில் உள்ள கறியை சாப்பிட்டலாம்.
நெஞ்சு எலும்பு கறியை சமைத்து உண்பதால் மார்புக்கு பலம் கிடைக்கும்.
மார்பு பகுதியில் உள்ள புண்கள் ஆறும். ஆட்டு இதயம் சாப்பிட்டால் நமது இதயத்திற்கு பலம் கிடைக்கும்.
மன ஆற்றல் பெருகும். ஆட்டின் நுரையீரல் சாப்பிட்டால் உடல் வெப்பம் தணியும், நுரையீரலுக்கு வலு கிடைக்கும்.
அதேபோல் ஆட்டின் கொழுப்பு இதயத்திற்கு நல்ல பலத்தை தரும்.
வயிற்றில் உள்ள எந்தவித புண்களையும் ஆற்றும் சக்தி இதற்கு உண்டு. கால், மூட்டு நோவு உள்ளவர்கள் ஆட்டுக்கால் சூப் வைத்து குடிக்கலாம். இதனால் கால்களுக்கு வலிவு கிடைக்கும்.  

Trending News

Latest News

You May Like