1. Home
  2. ஆரோக்கியம்

பனங்கிழங்கு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..?

பனங்கிழங்கு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..?


மார்கழி மாசம் தொடங்கி தை, மாசி வரை பனங்கிழங்கு சீசன் என்று சொல்வார்கள். அந்த மாதங்களில் பனங்கிழங்கு அதிகமாக நமக்கு கிடைக்கும். இதனைச் சாப்பிடுவதால் நமக்கு பலம் கூடுகிறது. வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..?

  • உடலுக்கு குளிர்ச்சித் தன்மை அளிக்கும், மலச் சிக்கலை போக்கக் கூடியது.
  • பனங்கிழங்கை சிறிது மஞ்சளுடன் சேர்த்து வேக வைத்து, பின்னர் கிழங்கை வெயிலில் காய வைத்து, அதை, மாவாக்கி, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, உடலுக்கு தேவையான இருப்புச்சத்து கிடைத்து, உடல் வலுவாகும்.
  • பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட பெண்களின் கர்ப்பப்பை வலுப்பெறும் மற்றும் உடல் உள் உறுப்புகள் நலம் பெரும். சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களும், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு உள்ளவர்களும் மாவை உணவில் சேர்த்துவர, நல்ல பலன்கள் தெரியும்.
  • பித்தம் கொஞ்சம் அதிகமாகவே உள்ள பனங்கிழங்கை சாப்பிட்டப் பின் சிறிது மிளகு மற்றும் பூண்டுகளை கலந்து சாப்பிட்டு வரலாம்.
  • பனங் கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலு கிடைப்பதுடன், ஆரோக்கியமும் மேலோங்கும்.
  • இந்த பனங்கிழங்கை அப்படியே சாப்பிடாமல் வித்தியாசமாக தோசை செய்து சாப்பிடலாம்.

  • வேக வைக்காத பனங்கிழங்கை வெயிலில் காயவைத்து, அரைத்து மாவாக்கி சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டும். தேவைக்கேற்ப இந்த மாவை கூழாக்கி சாப்பிடலாம். இந்த மாவை நீரில் கரைத்து, தேவைக்கு உப்பு சேர்த்து, கோதுமை தோசை ஊற்றுவது போல் ஊற்றி தோசையாக சாப்பிடலாம் அல்லது உப்புமா செய்தும் சாப்பிடலாம்.

நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக் கூடியது. ஆகையால், கிடைக்கும் போது பயன்படுத்துவோம், கிடைக்காத நாட்களுக்காக மாவாக சேமித்துக் கொள்வோம். ஆரோக்கியமாக இருப்போம்.

newstm.in

Trending News

Latest News

You May Like