கோடைகால அஜீரணத்தை குணப்படுத்தும் அற்புத பானங்கள் !!

கோடைகால அஜீரணத்தை குணப்படுத்தும் அற்புத பானங்கள் !!

கோடைகால அஜீரணத்தை குணப்படுத்தும் அற்புத பானங்கள் !!
X

கோடை காலங்களில் பெரும்பாலும் நாம் உட்கொள்ளும் உணவுகள், சரியாக செரிமானம் ஆகாமல் அஜீரண கோளாறுகளை கொண்டுவரும். அத்தகைய சூழல்களில் குமட்டல் தன்மை, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, வாயு தொல்லை, வயிற்று வலி போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும் . இந்த பிரச்னையை சரி செய்வதற்கான சிறந்த பானங்களைப்பற்றி பார்க்கலாம்.

இஞ்சி டீ:

கோடைகால அஜீரணத்தை குணப்படுத்தும் அற்புத பானங்கள்

இஞ்சி வயிற்று உபாதைகளுக்கு சிறந்த தீர்வை கொடுக்கக் கூடியது, மேலும் வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலங்களை கட்டுப்படுத்துகிறது. இஞ்சியை தண்ணீருடன் வேகவைத்து அந்த நீருடன் தேன் கலந்து தயாரிக்கும் இஞ்சி டீ வயிற்றில் ஏற்படும் அமிலப்பிரச்னையை விரைவில் சரி செய்யக் கூடியது.

கொழுப்பு நீக்கிய பால் :

கோடைகால அஜீரணத்தை குணப்படுத்தும் அற்புத பானங்கள்
கொழுப்பு நீக்கிய அல்லது குறைவான கொழுப்பு கொண்ட பால், வயிற்று பிரச்னைக்கு நல்ல தீர்வாக இருக்கும். மேலும், வயிற்றில் உருவாகும் அமில கோளறுகளை சரி செய்யக்கூடிய அருமையான மருத்துவ குணம் கொண்டவை. ஆனால் கொழுப்பு நிறைந்த பால் உடல் பருமனுக்கு வழிவகுக்கலாம்.

பாதாம்பால்:

கோடைகால அஜீரணத்தை குணப்படுத்தும் அற்புத பானங்கள்
பாதாம்பால் வயிற்றில் சுரக்கும் காரத்தன்மையை கட்டுக்குள் வைப்பதுடன், அமில தன்மையை சமன்படுத்த உதவுகிறது.

இளநீர்:

கோடைகால அஜீரணத்தை குணப்படுத்தும் அற்புத பானங்கள்
வயிற்றில் உண்டாகும் அமில பிரச்னையான அசிடிட்டி, அல்சர், அஜீரணம் போன்ற உபாதைகளை குறைக்க கூடிய தன்மை அதிகம் உள்ள பானம் என்றால் அது இளநீர் தான். இது உடலுக்கு தேவையான எலக்ட்ரோ லைட்டுகளை கொடுக்க கூடிய அற்புத பானமாக திகழ்கிறது.

துளசி இலை கலந்த நீர்:

கோடைகால அஜீரணத்தை குணப்படுத்தும் அற்புத பானங்கள்

3 அல்லது 4 துளசி இலைகளை ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, மிதமான சூட்டில் அந்த பானத்தை அருந்த வேண்டும். இது வயிறு சார்ந்த பிரச்னை, அஜிரணம், அமிலத்தன்மையை கட்டுக்குள் வைக்கிறது.

கொத்துமல்லி இலை கலந்த மோர்:

கோடைகால அஜீரணத்தை குணப்படுத்தும் அற்புத பானங்கள்
மோர், சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது. ஒரு டம்ளர் மோரில், சிறிது மிளகு தூள், ஒரு டீஸ்பூன் அரைத்த கொத்துமல்லி இலைகள், சிறிது புதினா இலைகளை கலந்து அருந்தும் பொழுது, வயிற்று பிரச்னைகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

கற்றாழை ஜூஸ்;

கோடைகால அஜீரணத்தை குணப்படுத்தும் அற்புத பானங்கள்
கற்றாழை மிகுந்த குளிர்ச்சி மிக்கவை. இந்த கற்றாழை ஜெல்லை கொண்டு செய்யப்படும் ஜூஸினை, உணவு சாப்பிடுவதற்கு முன்னர் அருந்துவதால் நல்ல செரிமான தன்மையை பெற முடியும்.

எலுமிச்சை கலந்த நீர்:

கோடைகால அஜீரணத்தை குணப்படுத்தும் அற்புத பானங்கள்

எலுமிச்சை கலந்த நீர் நல்ல செரிமான தன்மையை கொடுக்க கூடியது. எலுமிச்சையுடன் சிறிது சீரகப்பொடி மற்றும் கல் உப்பு சேர்த்து உணவு சாப்பிடுவதற்கு, முன்பாக அருந்துவதால் அஜீரண கோளாறு நம்மை அண்டாது.

ஆப்பிள் சாறு கலந்த பானம்:

கோடைகால அஜீரணத்தை குணப்படுத்தும் அற்புத பானங்கள்
இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் வினிகரை, ஒரு கப் நீரில் கலந்து, உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பாக அருந்துவதால் நல்ல ஜீரணத்தன்மையை அடைய முடியும்.

newstm.in

Next Story
Share it