போதைக்கு அடிமையாகும் ஆபீஸ் பெண்கள்!! ஆய்வில் தகவல்!
இந்தியாவில் வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக சமூக மேம்பாட்டு அறக்கட்டளை நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக சமூக மேம்பாட்டு அறக்கட்டளை நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தினாலும் புகைப்பழக்கம் இளம்பருவத்தினர் இடையே அதிகரித்து கொண்டுதான் வருகிறது. இதைவிட பெரிய அதிர்ச்சி என்னவென்றால் இதில் பெரும்பாலன பெண்களும் சிக்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் புகைப்பழக்கத்தினால் 9,32,600 இந்தியர்கள் பலியாவதாகவும், வாரமொன்றுக்கு 17,887 பேர் பரிதாபமாக உயிரிழக்கிறார்கள் என்றும் இந்த டொபாக்கோ அட்லஸ் தகவலைத் தயாரித்த அமெரிக்க புற்றுநோய் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை, டெல்லி, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் வேலைக்கு செல்லும் பெண்களிடம் புகைப்பழக்கம் அதிகம் காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அசோச்சாம் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை, அகமதாபாத், பெங்களுரு, சென்னை, டெல்லி,ஹைதராபாத், உள்ளிட்ட 10 நகரங்களில் 2 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு நடத்தியது. ஆய்வின் முடிவில், 22 முதல் 33 வயதுக்குட்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 40 சதவிகித பெண்கள் புகைப்பழக்கம் உள்ளவர்களாகவும், 2 சதவிகிதம் பேர் புகைக்கு அடிமையானவர்களாகவும் இருப்பது தெரியவந்துள்ளது. 12 சதவிகித பெண்கள் நாளொன்றுக்கு 2 அல்லது 3 சிகரெட் பிடிப்பவர்கள் என்று ஆய்வு கூறுகிறது.
இவ்வாறு புகைப்பிடிப்பதற்கு என்ன காரணம் அன ஆய்வு செய்யும் போது மன அழுத்தம், வேலைப்பளு போன்றவற்றால் புகைப்பழக்கத்தை மேற்கொண்டதாக ஆய்வில் கலந்து கொண்ட பெண்கள் கூறியுள்ளனர். மனநல மருத்துவரிடம் முறையான ஆலோசனை, உடற்கட்டுப்பாடு, நல்ல நண்பர்கள் சேர்க்கை இருப்பின் புகைப்பழக்கத்தில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக வெளிவர முடியும் என்பது மருத்துவர்களின் அட்வைஸ்.
முன்னதாக குளோபல் டொபாக்கோ அட்லஸ் நிறுவனம் வெளியிட்ட ஆய்வின்படி 10 - 14 வயதுக்குட்பட்ட 6.25 லட்சம் குழந்தைகள் புகை பழக்கத்திற்கு ஆளாகியிருப்பதாக வெளிவந்த தகவல் மிகவும் அதிர்ச்சி அடைய செய்கிறது.
newstm.in