1. Home
  2. ஆரோக்கியம்

ஒரு கோப்பை மோரில் வெந்தயம் சேர்த்து குடித்து வர...

1

கோடைக்காலத்தில்உங்கள்ஆரோக்கியத்தைகவனித்துஉடலுக்குகுளிர்ச்சியைவழங்கும்உணவைஎடுத்துக்கொள்ளவேண்டியதுஅவசியம்.இந்தவிஷயத்தில்மோர்மிகவும்நன்மைபயக்கும்.தயிருடன்தண்ணீர்சேர்த்துநன்றாகக்கலக்கிதயாரிக்கப்படுவதுமோர்.இதுதயிரைக்காட்டிலும்அதிகபலன்தருகிறது.கோடைக் காலத்தில் உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கண்டிப்பாக மோர் அருந்த வேண்டும்.

. உப்பு, சர்க்கரை, புதினா ஆகியவை சேர்த்து மோர் குடித்தால் நீர்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு, உடல் உஷ்ணம் ஆகியவை நீங்கிவிடும். அதிக வெப்பத்தால் பல நேரங்களில் கண்களில் எரிச்சல் ஏற்படும். மோர் குடிப்பதால் உடலுக்கு உள்ளிருந்து குளிர்ச்சி கிடைக்கும். இதனால் கண்கள் எரியும் உணர்வும் நீங்கும். அதேபோல், சிலருக்கு சருமத்தில் எரியும் உணர்வு இருக்கும். அப்படி இருந்தால் மோரை சருமத்தில் தடவ, உடனடி நிவாரணம் கிடைக்கும். கோடையில் அசிடிட்டி பிரச்னை தலைதூக்கும். மோர் அசிடிட்டிக்கு ஒரு அருமருந்தாக செயல்படுகிறது. மோரில் கொஞ்சம் கல் உப்பு, கரு மிளகு சேர்த்து குடித்து பாருங்கள் அமிலத்தன்மை உடனே குறைந்து விடும்.

\மோரில் உள்ள எலெக்ட்ரோலைட்ஸ் நம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் மோருடன் உப்பு சேர்த்து தினம் குடித்து வர உடல் மற்றும் சரும வறட்சி பிரச்னைகள் நீங்கும். உண்ணும் உணவில் உள்ள கழிவுகளைப் போக்கி உணவின் சத்துக்களை முழுமையாக உடலுக்குக் கொண்டு சேர்க்கும் பணியை மோரில் உள்ள சேர்மங்கள் செய்கின்றன. இதனால் கல்லீரலின் ஆரோக்கியம் மேம்படும்.மலச்சிக்கல், செரிமான பிரச்னை உள்ளவர்கள் மோர் குடிப்பது நல்லது. மோரில் காணப்படும் ப்ரோபயோடிக்ஸ் என்ற பாக்டீரியாக்கள் உடலில் செரிமான செயல்பாட்டை மேம்படுத்து உதவுகிறது..

 மசாலா பொருட்கள் நிறைந்த கடின உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது வயிற்றில் ஏற்படும் எரிச்சல் போன்ற உணர்வினை கட்டுப்படுத்த ஒரு கிளாஸ் மோருடன் இஞ்சி சேர்த்து குடிப்பது நல்லது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்னைக்கும், வயிற்று வலிக்கும் மோர் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. ஒரு கோப்பை மோரில் வெந்தயம் சேர்த்து குடித்து வர, இந்தப் பிரச்னைகள் நீங்கும்.மோரில் பயோ ஆக்டிவ் புரதங்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நம் உடல் செல்களில் உள்ள சோடியத்தின் அளவை சமநிலைப்படுத்த உதவுவதோடு, இரத்த அழுத்தத்தையும் சமநிலைப்படுத்துகிறது.மோர் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் சருமத்தில் உள்ள நச்சுக்கள் நீக்கி சருமம் பொலிவு பெறும்.

Trending News

Latest News

You May Like