விறைப்புத்தன்மை பிரச்னைக்கு விடை சொல்லும் நடிகர் வித்யூத் ஜம்வால்..!

விறைப்புத்தன்மை பிரச்னைக்கு விடை சொல்லும் நடிகர் வித்யூத் ஜம்வால்..!

விறைப்புத்தன்மை பிரச்னைக்கு விடை சொல்லும் நடிகர் வித்யூத் ஜம்வால்..!
X

பாலிவுட் நடிகரும் தற்காப்புக் கலைஞருமான வித்யூத் ஜம்வால் பாலியல் ஆரோக்கியத்தை பற்றி மக்கள் வெளிப்படையாக பேசவேண்டும் என்கிற விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், விறைப்புத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக்கூடிய 19 உடற்பயிற்சிகளை தன்னுடைய யூ-ட்யூப் சேனலில் பதிவேற்றியுள்ளதாக கூறியுள்ளார்.

நாம் அனைவரும் பாலியல் ஆரோக்கியம் மற்றும் விறைப்புத்தன்மை பாதிப்புகளை குறித்து இந்நேரத்தில் வெளிப்படையாக பேசுவது நல்லது. ஆண்களில் பத்துபேரில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அதற்காக நான் கலரிசூத்ரா என்கிற பயிற்சியை வலியுறுத்துகிறேன்.

இது 19 உடற்பயிற்சிகள் கொண்ட தொகுப்பாகும். இதை தினசரி செய்து வந்தால் உடலில் ரத்த ஓட்டம் புத்துயிர் பெறும். இடுப்பு பகுதிகள் வலிமை பெறும். இதனால் பாலியல் ஆரோக்கியம் பெருகும். உடல்நலனில் பாலியல் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் இதைப் பற்றி பேச கூச்சப்பட வேண்டும். எல்லாவித பிரச்னைக்கும் தீர்வுள்ளது என்று தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வித்யுத் ஜாம்வால் விரிவாக பேசியுள்ளார்.

Tags:
Next Story
Share it