உயிரை குடிக்கும் செயற்கை குளிர்பானங்கள் ஒரு பார்வை

தினசரி 3 லிட்டருக்கு மேல் செயற்கை குளிர் பானங்களை அருந்தும் நபருக்கு, அது மரணத்தை மட்டுமே பரிசாக வழங்குகிறது என்பது நம்மிடையே எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.

உயிரை குடிக்கும் செயற்கை குளிர்பானங்கள் ஒரு பார்வை
X

குளிர் பானங்களால் ஆண்டிற்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்.

சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள குளிர் பானங்களால் எந்த வித நன்மையும் நமக்கு கிடைப்பத்தில்லை. மாறாக தினசரி 3 லிட்டருக்கு மேல் செயற்கை குளிர் பானங்களை அருந்தும் நபருக்கு அது மரணத்தை மட்டுமே பரிசாக கொடுக்கிறது . சரி இதனால் நம் உடலுக்கு தரும் நோய்களை பற்றி பார்ப்போம்....

புற்று நோயை ஏற்படுத்தும்:

உயிரை குடிக்கும் செயற்கை குளிர்பானங்கள் ஒரு பார்வை
ஒரு வாரம் தொடர்ந்து செயற்கை குளிர் பானங்களை குடிப்பதனால், கணையத்தில் தொற்று ஏற்படுவதுடன் , கணைய புற்று நோய்க்கு வழிவகை செய்கிறது.
செயற்கை குளிர் பானம் அருந்துவதனால், ஆண்கள் புரோஸ்டேட் புற்றுநோயை சந்திக்க 40 சதவீதம் வாய்ப்புள்ளதாக ஆய்வு கூறுகிறது.
செயற்கை குளிர் பானங்களை அருந்துவதனால் மார்ப்பக புற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதில் உள்ள கெமிக்கல் குடல் புற்று நோயை ஏற்படுத்தகூடிய நச்சுக்களை கொண்டுள்ளது.

இதய நோய் :

உயிரை குடிக்கும் செயற்கை குளிர்பானங்கள் ஒரு பார்வை
அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரைகளை கொண்ட பானங்கள் விரைவில் இதயத்தை பலவீனப்படுத்தி, மரண வாயிலுக்கு அழைத்து செல்லும் அபாயம் கொண்டது, என அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் நிரூபித்துள்ளனர்.

சர்க்கரை நோய்:

உயிரை குடிக்கும் செயற்கை குளிர்பானங்கள் ஒரு பார்வை


அதிகப்படியான சர்க்கரை கலந்த பானங்களை அருந்தும் பொழுது இரு வகையான நீரிழிவு நோய்களை நாம் சந்திக்க நேரிடும். சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வின் படி 1,30,000 பேர் செயற்கை குளிர்பானங்களை அருந்துவதால், நீரிழிவு நோய்க்கு ஆளாகியுள்ளனர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கல்லீரல் பாதிப்பு:

உயிரை குடிக்கும் செயற்கை குளிர்பானங்கள் ஒரு பார்வை
ஒரு நாளைக்கு இரண்டு கேன் செயற்கை குளிர்பானங்களை அருந்துவதால் கல்லீரல் பாதிக்கப்படுவதாகவும். செயற்கை கலர் குளிர் பானங்களில் உள்ள, கெட்ட கொழுப்பு விரைவிலேயே கல்லீரல் செயல் இழப்பிற்கு காரணமாக இருக்கும் என 2009ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

வன்முறை எண்ணங்களை தூண்டும்:

உயிரை குடிக்கும் செயற்கை குளிர்பானங்கள் ஒரு பார்வை

ஒரு வாரத்திற்கு இரண்டு கேன் குளிர் பானங்களை அருந்தும் இளைய வயதோர் , வன்முறை எண்ணங்களை கொண்டவர்களாகவும், தீய எண்ணங்களுக்கு அடிபணிந்தவர்களாகவும் இருப்பார்கள் என ஆய்வுமுடிவுகள் காட்டுகின்றன.

பிரசவத்தில் சிக்கல்:

உயிரை குடிக்கும் செயற்கை குளிர்பானங்கள் ஒரு பார்வை
குளிர்பானங்களை கர்ப்பினி பெண்கள் தொடர்ந்து அருந்துவதனால் , பிரசவ காலத்திற்கு முன்பே குழந்தை பிற‌ப்பதற்கான அபாயம் அதிகம். குளிர் பானங்களில் இருக்கும் கெமிக்கல் பெண்களின் வளர் சிதை மாற்றத்தில் எதிர் வினை புரிவதால் இது போன்ற அபாயங்களை சந்திக்க நேரிடும்.

உடல் எடை, ஃப்ரி மெச்சூர்:

உயிரை குடிக்கும் செயற்கை குளிர்பானங்கள் ஒரு பார்வை
மேலும் குளிர் பானங்களை அருந்துவதனால் மூளையில் ரசாயன மாற்றம் ஏற்பட்டு ஹைப்பர் ஆக்டிவிற்கு வழிவகை செய்யும். இது உடல் எடையை அதிகரிப்பதுடன் சீக்கிரமே வயதான தொற்றத்தையும் தரக்குடியது. சிறு வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்பெய்துவதற்கு காரணமாக இருக்கிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

newstm.in

Next Story
Share it