நீரிழிவை முழுமையாக கட்டுக்குள் வைக்கும் நாவல்பழம்....

சருமத்தில் வரும் வெண்புள்ளி பிரச்னையைத் தீர்த்தல், கல்லீரல் மண்ணீரல் பாதுகாப்பு, அசி டிட்டிக்கு தீர்வு, சிறுநீரககற்களைக் கரைத்தல், இரத்தஅழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்தல், இதய நோய் வராமல் காத்தல், எலும்புகளில் வலுவை அதிகரித்தல், இரத்த உற்பத்தியை அதிகரித்தல் என இதன் நன்மைகள்

நீரிழிவை முழுமையாக கட்டுக்குள் வைக்கும் நாவல்பழம்....
X

நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பழமாக நாவல்பழம்சிறந்து விளங்குகிறது. இந்தப்பழங்கள் சத்துக்களைக் கொண்டிருக்கிறது என்பதோடல்லா மல் உயர்ந்த மருத்துவக்குணங்களையும் கொண்டிருக்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

நாவல் மரத்தின் இலை, மரப்பட்டை,வேர், விதை என அனைத்துமே மருத்துவக்குணம் கொண்டவை. இதிலிருக்கும் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

நாவல்பழத்தில் புரோட்டின், கால்சியம், மெக்னீஷியம், வைட்டமின்சி, வைட்டமின்பி, பிருக்ட்ரோஸ், க்ளுகோஸ், நார்ச்சத்து போன்றவை நிறைந் திருக்கின்றன. நாவல் பழங்களால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாமா?

நீரிழிவு நோயாளிகள் தினமும் நாவல்பழத்தைச் சாப்பிட்டுவந்தால் நீரிழிவுநோய் அதிகம் இருந்தாலும் அது மூன்று மாதத்தில் முழுமையாக உங் கள் கட்டுக்குள் வந்துவிடும். நாவல் பழத்தின் கொட்டைகளைத் தூக்கி யெறியாமல் நிழலில் உலர்த்தி பொடியாக்கி கண்ணாடி பாட்டிலில் வைத்து தினமும் நீரில் கலந்து குடிக்கலாம். இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். தொடர்ந்து எடுத்துவந்தால் நீரிழிவு வரா மல் தடுக்கலாம்.

நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னைகளிலிருந்து விடுபட உதவுகிறது. நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்னைகளைக் கொண்டிருப்பவர் கள் நாவல் பழத்தினால் செய்யப்பட்ட வினிகருடன் சமமான நீரைக் கலந்து காலை இரவு இரண்டு வேளையும் குடித்துவந்தால் நாளடைவில் பலன் தெரியும்.

வாய்ப்புண் முதல் குடல்வரை இருக்கும் புண்களைக் குணப்படுத்தும் சக்தியை நாவல்பழம் கொண்டிருக்கிறது. பல் ஈறுகளைப் பதம் பார்க்கும் பாக்டிரியாக்களை விரட்டி அடிக்க நாவல் இலைகளை உலர்த்தி பொடியாக்கி பற்கள் ஈறுகளில் படும்படி தேய்த்துவரலாம்.

புற்றுநோய் வராமல் தடுக்க உதவுவதில் மிக முக்கியமானதாக நாவல்பழம் விளங்குகிறது. இதிலிருக்கும் அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடண்ட் ஸ் மற்றும் வைட்டமின் சி ஆனது புற்றுநோய் வராமல் காக்கிறது என்கிறார்கள்.தொடர்ந்து நாவல்பழம் சாப்பிடுபவர்களுக்கு 30 % புற்றுநோய் உண்டாவது தவிர்க்கப்படுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்களும்.

பெண்களின் கருப்பையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நாவல் மர இலையைச் சாறாக்கி கஷாயமாக்கி குடித்தால் கருப்பை வலுப்பெறும். இந்த சாறுடன் தேன் அல்லது வெண்ணெய் கலந்து குடிக்கலாம்.

இவை மட்டுமல்ல சருமத்தில் வரும் வெண்புள்ளி பிரச்னையைத் தீர்த்தல், கல்லீரல் மண்ணீரல் பாதுகாப்பு, அசிடிட்டிக்கு தீர்வு, சிறுநீரககற்க ளைக் கரைத்தல், இரத்தஅழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்தல், இதய நோய் வராமல் காத்தல், எலும்புகளில் வலுவை அதிகரித்தல், இரத்த உற்பத் தியை அதிகரித்தல் என இதன் நன்மைகள் நீண்டுக்கொண்டே போகின்றது.

நாவல் பழம் மிகவும் நல்லது. தினமும் சாப்பிடலாம். ஆனால் அதிகப்படி நன்மை என்று தினமும் நாவல்பழத்தை மட்டுமே சாப்பிடுவது நிச்சயம் ஆரோக்யமானதல்ல.அளவோடு சாப்பிட்டால் அளவில்லா பயனை பெறலாம். நாவல்பழம் நன்மையான பழமே என்றாலும் அளவுக்கு மிஞ்சா மல் பார்த்துக்கொள்வது மேலும் நல்லது.

newstm.in

newstm.in

Next Story
Share it