உடலுறவில் ஏன் இத்தனை இன்பம்? சத்குரு விளக்கம்..!!

உடலுறவில் ஏன் இத்தனை இன்பம்? சத்குரு விளக்கம்..!!

உடலுறவில் ஏன் இத்தனை இன்பம்? சத்குரு விளக்கம்..!!
X

இயற்கை உடல் உறவில் ஒருவித இன்பத்தை புகுத்தி இருக்கிறது. இன்பம் இல்லாவிட்டால் நீங்கள் பிள்ளைகுட்டி பெற்று உங்கள் சந்ததியை வளர்க்காமல் போய்விடுவீர்களே! இதில் சுகம் இல்லை என்றால் யாராவது அத்தனை வலியுடன் குழந்தை பெற்றுக்கொள்ள முன் வருவார்களா என்ன? சுகம், பிள்ளை இவை எல்லாவற்றிற்கும் மேல், உங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று மற்றொன்றை உங்களுக்குள் ஒரு பாகமாக இணைத்துக் கொள்ள ஏக்கம் கொள்கிறது. இந்த ஏக்கம் உங்களுக்குள் வேரூன்றி இருக்கிறது.

உடல் சேர்க்கையில் ஈடுபடும்போது, ஒரு சில ஷணங்களில் அந்த ஒன்றிணைதலை நீங்கள் உணர்கிறீர்கள். எப்போதும் அந்த ஒன்றிணைதல் நடக்காதா என ஏங்குகிறீர்கள். ஆனால் அது நடைபெறுவதில்லை. போதுமான அளவிற்கு இதனை உணர்ந்து உங்களுக்கு இந்த உறவின் மீது விரக்தி ஏற்பட்டால் அப்போது உங்களுக்கு தியானம் செய்யப் பிடிக்கும்.

மாட்டு வண்டியை பூட்டிக் கொண்டு நிலவிற்குச் செல்ல நினைத்தால் முடியுமா என்ன? வண்டியை வேகமாக செலுத்தி, பறக்க முயற்சி செய்யச் செய்ய விரக்திதான் மிஞ்சும். இந்த வண்டி என்னை எங்கும் கூட்டிச் செல்லாது என்று புரிந்துவிடும்

Next Story
Share it