1. Home
  2. ஆரோக்கியம்

உஷார்..!! சப்பாத்தி மாவை ஃபிரிட்ஜில் வைத்து மீண்டும் பயன்படுத்துபவரா நீங்கள் ?



இன்றைய காலகட்டத்தில் இல்லத்தரசிகள் முதல் வேலைக்கு செல்லும் பெண்கள் வரை சமையல் வேலைகளை எப்படியெல்லாம் எளிமையாக்கலாம் என்றுதான் எண்ணுகின்றனர். சமையல் வேலையை எளிமையாக்க மற்றும் சமைக்கும் நேரத்தை குறைக்க சமையலுக்கு தேவையானதை முந்தைய நாளே செய்து வைத்துக்கொள்வார்கள்.

இதனால் மறுநாள் காலையில் சமைக்கும்போது பரபரப்பின்றி வேலையை எளிதில் முடித்துவிடலாம் என எண்ணுகின்றனர் இது நல்ல யோசனைதான் என்றாலும் ஒரு சில உணவுகளை அப்படி முன் கூட்டியே செய்து வைத்துக்கொள்வது அந்த உணவின் தன்மையை குறைக்கலாம்.

அப்படி சப்பாத்தியையும் பெண்கள் சிலர் பிசைந்து முன்கூட்டியே ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு பயன்படுத்துகிறார்கள் அல்லது பிசைந்த சப்பாத்தி மாவு மீந்துவிட்டாலும் ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால் இப்படி செய்வது சரியான முறையா..?

நீங்கள் தொடர்ந்து ஃபிரிட்ஜில் பிசைந்து வைக்கப்பட்ட மாவை பயன்படுத்தி வருகிறீர்கள் எனில் அது உடல் நலனிற்கு ஆபத்தாக மாறும். இதனால் வயிறு கோளாறு, செரிமானமின்மை, குடல் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் இவ்வேளையில் இது சற்று ஆபத்தான விஷயம்தான். பிசைந்த சப்பாத்தி மாவை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்குமாம். எனவே இனி ஃபிரெஷாக பிசைந்த மாவை மட்டுமே பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

மாவை பிசைந்தவுடன் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்குள் பயன்படுத்திவிடுவது நல்லது. மாறாக அதை பிசைந்து ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் பயன்படுத்தினால் மலச்சிக்கல் பிரச்சனைதான் வரும். எனவே கவனமாக இருங்கள். ஏற்கெனவே மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்கள் எனில் இந்த விஷயத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

Trending News

Latest News

You May Like