1. Home
  2. லைப்ஸ்டைல்

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை போக்க இந்த பழத்தை பயன்படுத்துங்க..!!

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை போக்க இந்த பழத்தை பயன்படுத்துங்க..!!


சில பெண்களுக்கு முகம் மற்றும் கை கால்களில் முடி வளர்வது உண்டு. இந்த பிரச்னைக்கு பெரும்பாலும் ஹார்மோன் வளர்சிதை மாற்றமே காரணமாக சொல்லப்படுகிறது. முகத்தில் வளரும் ரோமங்களை போக்க சிலர் வேக்சிங், த்ரட்னிங் போன்ற பார்லர் முறைகளை பின்பற்றுகின்றனர். இது உங்களின் முடி பிரச்னையை அதிகாமாக்குவதுடன் சரும கோளாறுகளையும் கொண்டு வந்துவிடும். எந்த ஒரு சருமம் சார்ந்த பிரச்னைக்கும் பொதுவான தீர்வு இயற்கைதான். பிரச்னையை சரி செய்ய இயற்கை மருத்துவம் சிறிது காலம் எடுத்துக்கொண்டாலும், நிறந்த தீர்வையும் சரும பாதுகாப்பையும் கொடுக்க வல்லது.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை போக்கக்கூடிய பப்பாளி மாஸ்க் பற்றி பார்க்கலாம். பப்பாளியில் உள்ள 'பப்பைன்' என்னும் பொருள் நிறத்தை கூட்டுவதோடு, முகத்தில் உள்ள கரும் புள்ளிகளையும் போக்கும்.

பப்பாளி மற்றும் மஞ்சள்:

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை போக்க இந்த பழத்தை பயன்படுத்துங்க..!!

பப்பாளி மற்றும் மஞ்சள் கலந்த கலவையை முகத்தில் பூசுவதன் மூலம் தேவையற்ற முடிகள் உதிர்வதுடன், சருமத்திற்கு நல்ல பாதுகாப்பையும் அளிக்கிறது. 2 டேபிள்ஸ்பூன் பப்பாளி பேஸ்ட், அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் இரண்டையும் நன்றாக கல‌ந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும் இந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காய வைத்து, பின்னர் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் முகத்தில் முடி வளர்வதை கட்டுப்படுத்த முடியும்.

பப்பாளி மற்றும் பால் :

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை போக்க இந்த பழத்தை பயன்படுத்துங்க..!!

பப்பாளி மற்றும் பால் கலந்த பேஸ்டை முகத்தில் பூசி வர முகத்தின் சரும நிறம் மேம்படுவதுடன். இதில் உள்ள லாக்டிக் அமிலம் தோலின் வெளிப்புற அடுக்குகளால் உறிஞ்சப்பட்டு, இறந்த தோல் செல்களை நீக்குகிறது. 2 டேபிள் ஸ்பூன் பப்பாளியுடன் 1 ஸ்பூன் பால் கலந்து முகத்தில் பூசி, 30 நிமிடங்களுக்கு பிறகு சுத்தமான நிரீல் கழுவ வேண்டும். இந்த முகப்பூச்சை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பயன்படுத்த வேண்டும்.

பப்பாளி மற்றும் கடலை மாவு:

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை போக்க இந்த பழத்தை பயன்படுத்துங்க..!!
பப்பாளி மற்றும் கடலை மாவு கலவை முகத்தில் வளரும் முடி வளர்ச்சியை தடுக்கிறது.
2 டேபிள்ஸ்பூன் பப்பாளியுடன் 1 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள், 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் பூச வெண்டும். இதை 20லிருந்து 30 நிமிடங்கள் காய வைத்து பின் முகத்தை நீரில் சுத்தம் செய்து கொள்ளலாம். இந்த பூச்சை வாரத்திற்கு 2லிருந்து 3 தடவை பயன்படுத்தலாம்.

பப்பாளி, கடலை மாவு மற்றும் கற்றாழை:

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை போக்க இந்த பழத்தை பயன்படுத்துங்க..!!
இந்த கலவை முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க உதவி செய்வதுடன், சருமத்தையும் ஆரோக்யமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. 2 டேபிள்ஸ்பூன் பப்பாளி, 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை, 1 டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள், 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி. 20 நிமிடங்கள் கழித்து நீரில் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும் இதை வாரத்தில் 4லிருந்து 5 முறை பயன்படுத்தலாம்.

பப்பாளி, கடுகு எண்ணெய், மஞ்சள் தூள், கற்றாழை, மற்றும் கடலை மாவு:

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை போக்க இந்த பழத்தை பயன்படுத்துங்க..!!

கடுகு எண்ணெயில் மசாஜ் செய்வதனால் முகத்தில் உள்ள முடிகள் உதிரும். 2 டேபிள்ஸ்பூன் பப்பாளி பேஸ்ட், 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை செல், 1 டேபிள்ஸ்பூன் கடலை மாவு, அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள், 2 டேபிள்ஸ்பூன் கடுகு எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை முகத்தில் பூசி காய்ந்தவுடன் நீரில் சுத்தம் செய்ய வேண்டும். இந்த கலவையை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் நல்ல பலனை பெற முடியும்.

Trending News

Latest News

You May Like