1. Home
  2. ஆரோக்கியம்

பெண்கள் எந்தெந்த சந்தர்ப்பங்களில் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது?



கர்ப்பிணிப் பெண்கள் முதல் மற்றும் கடைசி மூன்று மாதங்களில் தவிர்க்க வேண்டும். காரணம், முதல் மூன்று மாதங்கள்தாம் கரு உறுதியாகப் பற்றிக்கொள்ளத் தொடங்கும் காலம். அதுபோலவே, கடைசி மூன்று மாதங்கள் கர்ப்பிணிகளுக்கு சிரமங்கள் ஏற்படக்கூடும். இடைப்பட்ட மாதங்களில் தாம்பத்திய வாழ்க்கை வாழலாம். கர்ப்பமாயிருக்கும் மனைவியைக் கட்டாயப்படுத்துவதால், அவரது உடல் மற்றும் மனம் மட்டுமல்லாமல் பிறக்கவிருக்கும் குழந்தையின் மனநிலையும்கூட பாதிக்கப்படலாம்.

பிரசவத்திற்குப் பின்னான தாம்பத்திய வாழ்க்கையை சுகப்பிரசவமா, சிசேரியனா போன்ற ஒரு சில காரணிகள் நிர்ணயிக்கும். சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங்களாகும். இது ஒரு சராசரிக் கணிப்புத்தான். அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கணக்கு கூடவோ, குறையவோ செய்யலாம். குழந்தை பிறக்கும் போது பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும்.

கைக்குழந்தையிருக்கும் போது தாம்பத்தியம் பேணினால் தாய்ப்பால் இல்லாமல் போய்விடும் என்று பல பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இது மூட நம்பிக்கையே. கடுமையான வலி இருக்கலாம் என்ற பயத்திலேயே அதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள், கர்ப்ப காலத்தின்போதும், பிரசவத்தின் பின்னான காலத்தின்போதும் வைத்தியரின் சிபாரிசின் பேரில் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்.

கர்ப்பம் தவிர வேறு காரணங்களும் தாம்பத்தியத்தைத் தவிர்க்க அறிவுறுத்துகிறது.

  • கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரையிலும் இனப்பெருக்கத் தொகுதியில் கடுமையான எரிச்சலோ, வலியோ இருந்தாலும் தாம்பத்தியம் தவிர்க்கப்பட வேண்டும்.
  • கருச் சிதைவுக்குள்ளானவர்களும், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உறவைத் தொடங்க வேண்டும்.
  • மாதவிலக்கு நாட்களில், கணவன்-மனைவி இருவருக்குமே தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம் என்பதால் அந்த நாட்களையும் தவிர்த்தல் இருவருக்கும் நல்லது.

Trending News

Latest News

You May Like