1. Home
  2. ஆரோக்கியம்

நம் கண்களின் ஆரோக்கியத்திற்கு இந்த பழம் சிறந்த மருந்து..!!

நம் கண்களின் ஆரோக்கியத்திற்கு இந்த பழம் சிறந்த மருந்து..!!


நம்மூர்களில் சர்வ சாதாரணமாக கிடைக்கும் பழம் தான் சிவப்பு கொய்யா.கொய்யா பழத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அவற்றில் ஒருவகை பழமானது உள் பக்கம் சிவப்பாக இருக்கும்,மற்றொன்று வெள்ளை நிறமாக இருக்கும்.

இந்த இரண்டு வகை கொய்யா பழமும் நிறத்தில் மட்டுமல்ல அவற்றின் குணத்திலும் வேறுபட்டு காணப்படுகின்றது.

நம் கண்களின் ஆரோக்கியத்திற்கு இந்த பழம் சிறந்த மருந்து..!!

சிவப்பு நிற கொய்யாப்பழத்தின் நன்மைகள் ;

  • நீரிழிவு நோய் உடையவர்கள் சிவப்பு நிற கொய்யா பழத்தினை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் டைப்- 2 ம் வகை நீரிழிவு நோய் வராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
  • சிவப்பு நிறத்தில் இருக்கும் கொய்யா பழத்தில், கேரட் மற்றும் தக்காளி பழத்தில் இருக்கும் கரோட்டீனாய்டு என்னும் நிறமி அதிகம் உள்ளது. மேலும் இதில் நீர்ச்சத்து, விட்டமின் C போன்ற சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.
  • இதில் விட்டமின் A சத்துக்கள் உள்ளதால் நமது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது . எனவே இந்தப் பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், கண்பார்வை பிரச்சனைகள் ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்கிறது.
  • நமது உடம்பில் இருக்கும் பல்வேறு வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை
  • எதிர்த்துப் போராடி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் பாதுகாக்கும் சக்தி இந்த சிவப்பு கொய்யாப்பழத்திற்கு உள்ளது .
  • சிவப்பு கொய்யாவில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை, நமது வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை தடுத்து, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியைக் குறைத்து, நமது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கிறது.
  • எனவே அந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், நமது உடம்பில் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
  • சிவப்பு கொய்யாப்பழம் சாப்பிடுவதினால் அது நம் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியத்தினை பேலன்ஸ் செய்திடும். அதோடு ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளும், இதனால் ஹைப்பர் டென்சன் குறைந்திடும்.
  • அதோடு சிவப்பு கொய்யாப்பழம் ட்ரிக்ளிசிரைட்ஸ் மற்றும் கெட்டக் கொழுப்பினை நீக்கவும் துணை நிற்கிறது. இதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தவிர்க்க முடியும். கெட்டக்கொழுப்பை குறைப்பதுடன் நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது இந்த சிவப்பு கொய்யா.

இரவு நேரங்களில் கொய்யா பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரவு நேரங்களில் சாப்பிட்டால் சளி மற்றும் இருமல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

Trending News

Latest News

You May Like