தாம்பத்தியம் தினமும்... இதயத்துக்கு ரொம்ப நல்லதாம்..!!
தாம்பத்தியம் தினமும்... இதயத்துக்கு ரொம்ப நல்லதாம்..!!

செக்ஸ் என்பது தவறு இல்லை... செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அது சரியா, தவறா என்று தீர்மானிக்கப்படுகிறது. செக்ஸ் என்பது உடலுக்கு மிகவும் நல்லது என்றுதான் மருத்துவம் சொல்கிறது.
இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கிறது என்கின்றன ஆய்வு முடிவுகள்...
ஆம், செக்ஸ் என்பது கிட்டத்தட்ட ஒரு நல்ல உடற்பயிற்சியே. இது இதயத்தின் செயல்திறனை மேம்படுத்த உதவுகின்றது என்கின்றது அமெரிக்கன் ஜேர்னல் ஆஃப் கார்டியாலஜி ஆய்வு முடிவு ஒன்று. எல்லோருக்கும் நல்லது என்று நினைக்க வேண்டாம்... தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உள்ள, இதய நோய் இல்லாதவர் செக்ஸ் செய்வதன் மூலம் அவரது இதயத்தின் செயல்திறன் மேம்படுகிறது என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
செக்ஸ் மேற்கொள்ளும்போது, உடலில் அதிகக் கலோரி எரிக்கப்படுகிறது. வழக்கமாக எரிக்கப்படும் கலோரி அளவைக் காட்டிலும் இரண்டு, மூன்று மடங்கு அதிகம் கலோரி செலவாகிறது. இது ஏரோபிக் பயிற்சி செய்வதைக் காட்டிலும் சிறந்தது. ஒரு நிமிடத்துக்கு நான்கு கலோரி வரை எரிக்க முடியுமாம். 30 நிமிடம் செக்ஸ் வைத்துக்கொண்டால் 120-க்கும் அதிகமான கலோரிகளை எரிக்க முடியும் என்கிறது மற்றொரு ஆய்வு முடிவு.
இதனால், உங்கள் துணையோடு ஆரோக்கியமான, மகிழ்ச்சியாகத் தாம்பத்தியத்தை மேற்கொள்ளுங்கள்... மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள்.