தொப்பை முழுக்க கரைந்து தட்டையான வயிறைப் பெற இதை செய்தாலே போதும்..!!

தொப்பை முழுக்க கரைந்து தட்டையான வயிறைப் பெற இதை செய்தாலே போதும்..!!

தொப்பை முழுக்க கரைந்து தட்டையான வயிறைப் பெற இதை செய்தாலே போதும்..!!
X

பாரம்பரிய விவசாயத்தில் பயிர் செய்து விளைவித்த சோளம், கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற பயிர்களை நாகரீகமற்ற உணவுகள் என்று நாம் தூக்கிப் போட்டுவிட்டு பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா என களமிறங்கியதும் சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை நோய்கள் நம்மை நோக்கிப் பாயத் தொடங்கிவிட்டன.

என்னதான் மருந்துகள் சாப்பிட்டாலும் உணவு முறையால் மட்டும் தான் நிரந்தரமான தீர்வைக் காணமுடியும் என்று உணர்ந்து கொண்டபின், இப்போது தான் நம் பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்பியிருக்கிறோம்.

நம் தமிழர்கள் ஆதி காலத்தில் தினமும் சாப்பிட்ட உணவுகளில் ராகியில் தயாரிக்கும் உணவு முதல் இடத்தினை பிடித்திருந்தது.ராகியில் அதிக அளவில் கால்சியம் சத்து இருப்பதால், எலும்பு, பற்கள் என அத்தனைக்கும் நல்லது. குறிப்பாக, கோடை காலத்தில் இதை சாப்பிடுவது நல்லது.ஏனெனில் இது உடல் சூட்டைத் தணித்து, உங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

கோடையில் உடலின் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், இக்காலத்தில் ராகியை உணவில் சேர்த்து வந்தால், உடல் வெப்பமானது குறையும்.உடலின் வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.இதில் அதிக அளவில் புரதச்சத்துக்களும் கனிமச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
அதிகப்படியான தொப்பையால் அவதிப்படுகிறவர்கள் தொப்பை முழுக்க கரைந்து, தட்டையான வயிறைப் பெற வேண்டுமென்றால், தினமும் காலையில் ராகி உருண்டையைச் சாப்பிட வேண்டும்.

1

அப்படி காலையில் ராகி உருண்டை சாப்பிடுவதனால், அதில் உள்ள அதிக அளவிலான அமினோ அமிலங்கள், ட்ரிப்ஃபன் மற்றும் அடிக்கடி பசி எடுப்பதைத் தடுக்கும்.
ராகியில் உள்ள அதிக அளவில் உள்ள கால்சியம், வைட்டமின் டி ஆகியவை இருப்பதால் இது எலும்புகளுக்கு அதிக பலம் கொடுக்கக் கூடியது.அதிலும் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கூட இதை எளிதாக சாப்பிடலாம்.

சர்க்கரை நோய் இருக்கின்றவர்களுக்கு ராகி மிகவும் நல்லது.இது ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.எப்போதும் சீராக ரத்த அழுத்தத்தையும் வைத்திருக்கச் செய்யும்.ராகி உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்கும்.

ராகியில் அதிக அளவில் லெசிதின் மற்றும் மெத்தியோனைன் என்னும் தீமையை உண்டாக்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது.இதிலுள்ள அமினோ ஆசிடுகள், கல்லீரலில் தங்கியுள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலையும் கரைத்துவிடும்.மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகின்றவர்கள் அடிக்கடி ராகியை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள் தீரும்.

1

தைராய்டு பிரச்சினை இருக்கின்றவர்களுக்கு மிக நல்லது ராகிகுறிப்பாக, ஹைப்போ தைராய்டு இருக்கின்றவர்கள் இந்த ராகியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது தைராய்டை சரிசெய்யும்.

பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த ராகி மிக நல்லது.பால் கொடுக்கும் தாய்மார்கள் அடிக்கடி ராகியை உணவில் எடுத்துக் கொள்வதால், உடலுக்குள் இருக்கின்ற சிவப்பணுக்களின் அளவினை அதிகரிக்கும். பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.

Next Story
Share it