மாம்பழ தோலில் இவ்வளவு விஷயம் இருக்கா ? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
மாம்பழ தோலில் இவ்வளவு விஷயம் இருக்கா ? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

அனைவருக்கும் பிடித்தமான பழங்களில், மாம்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால், அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் ஏற்படும் என ஒதுக்குவதும் உண்டு. மாம்பழத்தில், 100 கிராமில், 12.2 முதல், 42.2 மில்லி கிராம் வரை விட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை விட்டமின் சியும் உள்ளது.
தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால், இந்த இரண்டு விட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுவதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்து விடுவர்.
மாம்பழத்தின் தோல் பகுதியில் தான், விட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை, நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.
வெண்ணெயில் அதிகமான விட்டமின் ஏ இருப்பது போல மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான விட்டமின் ஏ இருப்பதால், வெண்ணெயை உண்பதைவிட மாம்பழத்தை உண்ணலாம்.