1. Home
  2. ஆரோக்கியம்

இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே..!! குழந்தைப் பேறுக்கு மெட்டிக்கும் இவ்வளவு சம்பந்தம் உள்ளதா ?



பெண்கள் தங்கள் அழகை அதிகரிக்க அணியும் ஆபரணங்கள் கூட ஆரோக்யத்துடன் தொடர்புடையவைதான். கொஞ்சம் அழகு... அதிகம் ஆரோக்யம் என்று கூட சொல்லலாம். உச்சி வகிட்டில் அணியும் நெற்றிச்சுட்டி முதல் காலில் அணியும் மெட்டிவரை அனைத்தும் காரண காரியங்களுக்காக கட்டாயம் அணிய வேண்டும். இதையே அழகு பொருளாக்கி கண்களை கவரும் வகையில் நம் முன்னோர்கள் பழக்கி விட்டார்கள். அவற்றில் ஒன்று காலில் அணியும் மெட்டி. மெட்டியிடும் விரல்களுக்கும், கருப்பை நரம்புகளுக்கும் ஒருவித முடிச்சு தொடர்பு உள்ளது. அதனால்தான் மெட்டி அணிவதை திருமணம் நடக்கும் அன்று சுபநிகழ்வாக வைத்து பழக்கினர்கள். உச்சியில் வைக்கும் நெற்றிப்பொட்டும் கழுத்தில் அணியும் மாங்கல்யத்தின் தாத்பர்யமும் கூட இதுதான். திருமங்கை ஆழ்வாரின் வரலாற்றில் ஆண்கள் கூட மெட்டி அணிந்து வந்திருப்பது அறிய முடிகிறது.

இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே..!! குழந்தைப் பேறுக்கு மெட்டிக்கும் இவ்வளவு சம்பந்தம் உள்ளதா ?

பெண்கள் முழுமையடைவது தாய்மை என்னும் மறு பிறவியில்தான். இத்தகைய குழந்தைப் பேறை பெண்கள் எவ்வித சிக்கலுமின்றி எதிர்கொள்ளவே மெட்டியை அணிந்துகொள்ள பரிந்துரைக்கிறார்கள். கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் மட்டுமே அதிலும் வெள்ளியால் செய்த மெட்டியை மட்டுமே அணிய வேண்டும் என்று சொல்வதற்கு காரணங்கள் உண்டு. கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான் கருப்பை நரம்பு நுனிகள் முடிகின்றன.வெள்ளியில் இருக்க கூடிய ஒருவித காந்தசக்தி நரம்புகளில் ஊடுருவி உடலில் உள்ள நோய்களை நிவாரணம் செய்யும். அதிலும் கருப்பை சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்கவும், கருப்பையைப் பலப்படுத்தும் வகையிலும் நரம்புகளைத் தூண்டும். கர்ப்பக் காலத்தில் ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு பிரச்னைகள் அதிகம் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும். பொதுவாக கர்ப்பக் காலத்தின் போது அந்த நரம்புகளைத் தூண்டும் வகையில் மெட்டி அணியும் விரல்களை அழுந்த தேய்த்தால் போதும். ஆனால் எப்போதும் அப்படி அழுத்திக்கொண்டிருக்க முடியாது என்பதால்தான் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் மெட்டி அணியும் பழக்கத்தை கொண்டு வந்தனர்.

இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே..!! குழந்தைப் பேறுக்கு மெட்டிக்கும் இவ்வளவு சம்பந்தம் உள்ளதா ?

மெட்டி அணிந்து நடக்கும் போது விரலும் மெட்டியும் உராய்ந்து நரம்புகளைத் தூண்டுகிறது. கருப்பை பாதிப்புகள் வராமல் தடுக்கவே மெட்டி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். மெட்டிக்கும்,கருப்பைக்கும் தொடர்பு உண்டு என்பதால்தான் கணவனை இழந்து கைம்பெண்ணாக வாழும் பெண்கள் மெட்டியைத் தவிர்க்க வேண்டும் என்னும் பழக்கமும் கொண்டு வந்தார்கள்.இன்று பெண்கள் மத்தியில் இன்று மெட்டி என்பது வெறும் அழகுக்காக மட்டுமே பார்க்கப்படுகிறது. மெட்டிக்குரிய விரலில் மட்டுமே ஒரு மெட்டியாக உருட்டையாக அணிய வேண்டும். ஆனால் இன்றுநான்கு விரல்களிலும் மெட்டி அணிகிறார்கள். மெட்டி அணிவதற்கான தாத்பரியத்தை மறந்து வடிவங்களை மாற்றி கருப்பை பிரச்னைகளை எதிர்நோக்கியிருக்கிறார்கள். நாகரிகத்தைக் கடைபிடிக்கலாம். ஆனால் அவை பாரம்பரியத்தை சீரழிக்கும் வகையில் இருக்க கூடாது என்பதுதான் முக்கியம்.

Trending News

Latest News

You May Like