விறைப்பு தன்மை பிரச்சினையை சரி செய்ய ஏலக்காய் முதல் இஞ்சி வரை எவ்வாறு பயன்படுத்தலாம்?
விறைப்பு தன்மை பிரச்சினையை சரி செய்ய ஏலக்காய் முதல் இஞ்சி வரை எவ்வாறு பயன்படுத்தலாம்?

ஆண்கள் மத்தியில் அதிகரித்து வரும் பிரச்சினை விறைப்புத் தன்மை கோளாறு.இதற்கு முக்கிய காரணம் உடலில் இரத்த ஓட்டம் ஒழுங்கற்று இருப்பது. இரத்த ஓட்டம் சீரற்று இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
ஊட்ட சத்து குறைவான உணவு, சரியான உடல் செயல்பாடு இல்லாதது, சோம்பல் மற்றும் உக்கார்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பது போன்றவை காரணமாக சொல்லப் படுகிறது.சரி இதற்கு என்ன தான் தீர்வு என்று கேட்டால், வாசனைக்காக உணவு பொருள்களில் பயன்படுத்தப்படும் ஏலக்காய் இதற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வாக இருக்கிறது.
ஏலக்காய் எப்போதும் சிறிய அளவில் எடுக்கப்பட வேண்டும். உணவில் அதிகமாகச் சேர்ப்பது அதிகமாக எடுத்துக் கொண்டால் பக்கவிளைவை ஏற்படலாம். இதை தேநீர் அல்லது தேன் மற்றும் சூடான நீரில் சேர்த்து பருகலாம்.தினமும் தேநீர் அல்லது தேனுடன் ஏலக்காயை குடித்து வந்தால், நரம்பு தளர்ச்சியை சரிசெய்து நரம்புகளை பலப்படுத்தும். தினமும் காலையிலும் மாலையிலும் குடிக்க வேண்டும்.
பூண்டு ஒரு மிகச்சிறந்த ஆணுறுப்பை பெரிது படுத்தும் பொருளாகும். இதில் அலிசின் உள்ளது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இது விறைப்பு தன்மையை நீண்ட நேரத்திற்கு தக்கவைக்க உதவியாக உள்ளது.
வெங்காயம் ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது உடலுறவின் வீரியத்தை அதிகரிக்க உதவுகிறது. இது ஆணுறுப்பை பெரிதுபடுத்த மிகச்சிறந்த வீட்டு மருத்துவ குறிப்பாகும்.
கேரட் ஆண்களின் ஆண்மை மற்றும் விந்தணுக்களின் செயல் திறனை அதிகரிக்க உதவுகிறது. இது கருமுட்டையை நோக்கி விந்தணுக்கள் வேகமாக செல்ல தேவையான சக்தியை விந்தணுக்களுக்கு தருகிறது.
ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உணவுகள் ஆண்களின் திறனை இயற்கையாகவே அதிகரிக்க உதவுகின்றன. இவை இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. இது உச்சமடைதலுக்கும் உதவுகிறது.
மாதுளை ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது. இது ஆணுறுப்பிற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் எளிதில் விறைப்பு தன்மை உண்டாகிறது.
இஞ்சியில் பொட்டசியம், மெக்னீசியம், விட்டமின் பி6 , மங்கனீசு ஆகியவை உள்ளன. இவை உடலுறவில் வீரியம் அளிப்பதில் மிகவும் சிறந்தவை. இது விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆண்மையையும் அதிகரிக்கிறது.