அதிகாலையில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!!

அதிகாலையில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!!

அதிகாலையில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!!
X

காலை என்பது ஒரு நிதானமான நேரம். எனவே அமைதியாக, மெதுவாக எழுந்து உங்களது தசைகளை மெதுவாக அசையுங்கள்.

நீங்கள் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது உங்கள் வலது பக்கமாகத் திரும்பி எழுந்திருங்கள். இது உடலின் ஆற்றல் ஓட்டத்தை சீராக்கும்.

நாம் காலையில் எழுந்திருக்கும் போது, நமது தசைகள், குறிப்பாக முதுகெலும்பு சற்று விறைப்பாக இருக்கும். நாம் நெட்டி முறிக்காமல் எழுந்திருக்கும் போது இந்த விறைப்புத் தன்மை தொடர்வதால், இது நமது நாள் முழுவதும் நமது ஆக்கத் திறனை சமரசம் செய்து விடும்.ஆகவே எழுந்ததும் மெதுவாக நடக்கவும். தசைப் பிடிப்புகள், தசை இறுக்கங்கள் இருந்தால், நெட்டி முறிக்கவும். மூன்று அல்லது நான்கு மெதுவான நெட்டிகள் மற்றும் சில பெருமூச்சுகள் உதவியாக இருக்கும்.

காலையில் எழுந்த உடனேயே உடற்பயிற்சி செய்வது நல்ல பழக்கம் அல்ல. இரவு முழுவதும் உடல் ஓய்வெடுத்திருப்பதால் வெறும் வயிற்றில் உடற்பயிற்சியை தொடங்கக்கூடாது. திரவ உணவுகளையோ அல்லது நீரோ பருகிவிட்டு உடற் பயிற்சி செய்வது நல்லது.

காலையில் தேனீர் அல்லது காரத் தன்மையான பானத்துடன் அந்த நாளைத் தொடங்கக் கூடாது. உங்களது நாளை சர்க்கரை மற்றும் பால் சேர்ந்த டீ அல்லது காபி போன்ற அமிலத் தன்மையான பானங்களுடன் தொடங்க வேண்டாம். எலுமிச்சை சாறு மற்று தண்ணீர் குடிக்க வேண்டும். வைட் டீ அல்லது கிரீன் டீ குடிப்பதைப் பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள்.

சூரிய வெளிச்சம் நன்றாக பிரகாசிக்க தொடங்கிய பிறகும் தூங்கிக்கொண்டிருப்பது தவறான பழக்கம். காலையில் எழுந்ததும் கண்கள் கூசாத அளவில் சூரிய கதிர்களை பார்ப்பது நாள் முழுவதும் மனநிலையையும், உடல் ஆற்றல் மட்டத்தையும் அதிகரிக்க உதவும். மழைக்காலங் களில் சூரிய கதிர்களை பார்க்க முடியாத பட்சத்தில் விளக்கு வெளிச்சத்தை சில விநாடிகள் பார்க்கலாம்.

மொபைல் போன்களை செக் பண்ணுவது, ஈமெயில் செக் பண்ணுவது மற்றும் வேறு உத்திகளை ஒரு காலையில் எழுந்தவுடன் செய்யாதீர்கள். உங்களது ஆற்றலை முக்கியமற்ற வேலைகளில் செலுத்தாமல் மிக முக்கியமான வேலைகளில் செலுத்துங்கள்.

காலை உணவைத் தவிர்ப்பதால், உடல் பருமன், நீரிழிவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைதல் ஆகியவை ஏற்படுகின்றன என சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன.நீங்கள் காலையில் சாப்பிடவில்லை என்றால், அந்த நாள் முழுவதும் உங்களது உணவுத் தேர்வு தவறாகவே இருக்கும்.நீங்கள் காலையில் ராஜா மாதிரி உணவு உட்கொள்ளத் தேவையில்லை. ஆனால் ஏதாவது சாப்பிட வேண்டியது அவசியம்.


Next Story
Share it