குங்குமம் பூ சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா..?

குங்குமம் பூ சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா..?

குங்குமம் பூ சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா..?
X

குங்கும பூ என்றாலே நம் உடலுக்கு வெள்ளை நிறத்தை அளிக்க கூடிய ஒன்று என நினைத்து கொண்டிருக்கிறோம் . ஆனால் குங்கும பூவில் அவற்றை தாண்டி நம் உடலுக்கு பல நன்மைகள் அளிக்க விஷயங்கள் உள்ளன. அவை என்ன என்பதனை பின் வருமாறு காணலாம்.

இதய நோய்களுக்கு எதிராக:

அற்புதமான சாலாவாக இருக்கும் குங்குமப்பூவில் தியாமின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற தாதுக்கள் நிரம்பியிருக்கின்றன. இந்த தாதுக்கள் இதயத்திற்கு நல்ல சத்தினை அளிக்கிறது. மேலும் இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. அன்றாட உணவில் குங்கும பூ சேர்ப்பதனால் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு இருந்தால் அவற்றை நீக்கி சரிசெய்ய உதவுகிறது. மேலும் ரத்த அழுதத்தை கட்டுபடுத்துவதோடு அல்லாமல் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கிறது.

மன அழுத்தம் குறைக்க:

இது என்ன குங்கும பூ சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா என ஆச்சரியமாக பார்க்கிறீர்களா.இது குறித்து ஆய்வு ஒன்று செய்யபட்டுள்ளது அதில் குங்குமபூவின் சாறு மற்ற மூளை ஆர்மோன்களின் அளவை மாற்றாமல் மூளையில் டோமைன் அளவை அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குங்கும பூ சப்ளிமெண்ஸ்கள் மன நிலையை மேம்படுத்துவதோடு மன அழுத்த மருந்துகளாகவும் செயல்படும் என அந்த ஆராய்ச்சி கூறுகிறது.

எடையை குறைக்க:

பசியை கட்டுப்படுத்த, ஜங்க் உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தடுக்கவும் மற்றும் உடல் எடையை இழக்க உதவுவதாக ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. குங்குமப்பூ சாறு குறிப்பாக கரோனரி தமனி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிஎம்ஐ அளவை குறைக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் குங்குமப்பூ எடையை குறைக்க நினைக்கும் அனைத்து தரப்பினருக்கும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த:

லிபிடோ அளவை அதிகரிக்க குங்குமப்பூ உதவும். குங்குமப்பூவை கொண்டு நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகள் விறைப்புத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த செக்ஸ் உந்துதல் ஆகியவற்றில் நேர்மறையான தாக்கத்தை கண்டறிந்துள்ளன.

நினைவாற்றலை மேம்படுத்தும்..

குங்குமப்பூவில் காணப்படும் குரோசின் மற்றும் குரோசெடின் ஆகிய ரசாயன கலவைகள் நினைவாற்றல் மற்றும் மூளை செயல்பாடுகளை மேம்படுத்த உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். மேலும் குங்குமப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வருவது அல்சைமர் நோய் அறிகுறிகளை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் குங்குமப்பூவானது மூளையில் ஏற்படும் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை குறைக்க உதவ கூடும், தவிர சில சாத்தியமான நரம்பு மண்டல சேதத்தையும் தடுக்க உதவும் என்பது தெரிய வந்தது.

இதுபோன்ற பல நன்மைகள் குங்குமபூவில் உள்ளன.

Next Story
Share it