தாம்பத்திய உறவு ஏன் அவ்வளவு அவசியம் தெரியுமா ?

தாம்பத்திய உறவு ஏன் அவ்வளவு அவசியம் தெரியுமா ?

தாம்பத்திய உறவு ஏன் அவ்வளவு அவசியம் தெரியுமா ?
X

எந்த உறவாக இருந்தாலும் நெருக்கம் அதிகரித்தால் தான் அந்த உறவின் பலம் அதிகரிக்கும்.வாழ்க்கையில் நெருக்கம் தான் அவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். அதற்கு தாம்பத்திய வாழ்க்கை மிகவும் அவசியம்.

கல்யாண வாழ்க்கை சலிப்படையாமல் இருக்க தாம்பத்திய வாழ்க்கையும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த தாம்பத்திய உறவு தான் ஆயுள் முழுவதும் உறவை நீட்டிக்கச் செய்கிறது. இந்த தாம்பத்திய வாழ்க்கை என்பது உறவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கணவன் மனைவி இருவரும் ஒன்றிணைந்து வாழும் வாழ்க்கையில் எத்தனை கவலைகள், சண்டைகள், நெருக்கடிகள் வந்தாலும் அவற்றிலிருந்து கொஞ்சம் ஓய்வு கிடைக்கிறது, மன நிம்மதி கிடைக்கிறது என்றால் அதற்கு இருவரின் இணைப்பு தான் முக்கிய காரணம். செக்ஸ் இருவரின் மன அழுத்தத்தைக் குறைக்க சிறந்த மருந்தாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வைக்கிறது.

கல்யாணத்தில் தாம்பத்திய வாழ்க்கை என்பது வெறும் உடலளவில் மட்டும் நெருக்கத்தை உண்டாக்காது.மனதளவிலும் உணர்வுப் பூர்வமான நெருக்கத்தை உண்டாக்கும். அதுமட்டுமில்லாமல் உணர்வுப் பூர்வமான காதலை வெளிப்படுத்துவது இந்த உடலுறவுக்கு நிகர் எதுவும் இருக்க முடியாது.

நீங்கள் பார்ட்னர் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளீர்கள் என்பதைக் காட்ட உடலுறவும் நல்ல வாய்ப்பு. நீங்கள் அவர்கள் மீது கொண்டுள்ள அக்கறை, காதல் அனைத்தையும் அதன் மூலம் வெளிப்படுத்த முடியும். எனவேதான் கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க தாம்பத்தியம் அவசியம் என்கின்றனர்.

Tags:
Next Story
Share it