ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் எந்தவிதமான முதல் உதவி செய்ய வேண்டும் தெரியுமா?

ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் எந்தவிதமான முதல் உதவி செய்ய வேண்டும் தெரியுமா?

ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் எந்தவிதமான முதல் உதவி செய்ய வேண்டும் தெரியுமா?
X

ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் எந்தவிதமான முதல் உதவி செய்ய வேண்டும் தெரியுமா?

மாரடைப்பின் போது, நோயாளியின் இதயம் இரத்தத்தை பம்ப் செய்யும் திறனை இழந்து, குறைந்த செயல்திறனுடன் தொடர்கிறது. இது மிகவும் முக்கியமான காலகட்டம். மாரடைப்பின் போது "மார்பு வலி இடது கை வரை பரவக்கூடும். பெரும்பாலும் நெஞ்சுப்பகுதியில் லேசான மந்தமான வலி, நெஞ்சு எரியும் உணர்வு, இது பெரும்பாலும் தீவிர வியர்வையுடன் இருக்கும் ”என்று டாக்டர்கள் விளக்குகின்றனர்.

அதோடு மற்ற சில அறிகுறிகளில் தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் கூட அடங்கும். இந்த அறிகுறிகள் 15 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தால், இது பொதுவாக மாரடைப்பின் தெளிவான அறிகுறியாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். திடீரென மயக்கமும் ஏற்படக் கூடும்.

ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் , அந்த முக்கியமான தருணத்தில் என்ன செய்ய முடியும் என்பது குறித்து பார்க்கலாம்...

நோயாளி நினைவுடன் இருந்தால், சவுகர்யமான படுக்கைகு அல்லது இருக்கைக்கு நகர்த்தபடுவது அவசியம். பின்னர் இறுக்கமான துணிகளை அவிழ்க்க வேண்டும். பின்னர், அவர்கள் இதய நோயாளிக்கான மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்களா? என்பதை அறிந்து பதிப்பிற்கு உள்ளானவர்களூக்கு வழங்குவது மிக் ஔதவியாக இருக்கும். ஆனால் முன் பயன்பாட்டின் வரலாறு இல்லை என்றால் அவை மருத்துவ மேற்பார்வை இல்லாமல் வழங்கப்படக்கூடாது.

மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு  எந்தவிதமான முதல் உதவி செய்யவேண்டும் தெரியுமா?

அடுத்தகாக ஆஸ்பிரின் என்னும் மாத்திரைகளை உடனடியாக மெல்லக் கொடுக்க வேண்டும்.

இருப்பினும், நபர் மயக்கமடைந்தால், சிபிஆர் கொடுப்பதை பற்ரி பயிற்சி பெற்ற நபர்கள் உடனடியாக சிபிஆரை தொடங்குவது நல்ல பலனை தரும்.

ஒரு ஆம்புலன்ஸ் அவர்களை அடைவதற்கு ஒருவர் காத்திருக்கக் கூடாது, அதற்கு பதிலாக நோயாளியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு விரைவில் அழைத்துச் செல்ல முயற்சிக்க வேண்டும். "மேலும், உங்கள் வருகையைப் பற்றி மருத்துவமனைக்குத் தெரிவிப்பது விவேகமானதாகும், இந்நிலையில் பெரும்பாலான மருத்துவமனைகள் உடனடியாக முன்னெச்சரிக்கையுடன் நோயளியை கையாள்வதற்கும், உயிரை காக்கவும் ஏதுவாக இருக்கும்.

மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு  எந்தவிதமான முதல் உதவி செய்யவேண்டும் தெரியுமா?

மேற்கண்ட முதல் உதவிகளை செய்வதன் மூலம் மரடைப்பு ஏற்பட்ட பெரும்பாலான நோயாளிகளின் உயிரை காக்க இயலும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Next Story
Share it