கேரட் தினமும் சாப்பிடுவதால் என்ன பலன் தெரியுமா ? ஆண்மைக் குறைவு பிரச்னைக்கு உதவும் கேரட்

கேரட் தினமும் சாப்பிடுவதால் என்ன பலன் தெரியுமா ? ஆண்மைக் குறைவு பிரச்னைக்கு உதவும் கேரட்

கேரட் தினமும் சாப்பிடுவதால் என்ன பலன் தெரியுமா ? ஆண்மைக் குறைவு பிரச்னைக்கு உதவும் கேரட்
X

மிகச் சாதாரணமாக உணவில் பயன்படுத்தப்படும் காய்கறி கேரட். காரட்டைச் சமைத்துச் சாப்பிடலாம். பச்சையாகவும் சாப்பிடலாம். கேரட்டைப் புதியதாகவே சமைக்க வேண்டும். வதங்கிய கேரட்டில் சத்துக்கள் குறைந்து விடும்.நாம் கேரட்டைச் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இரத்த விருத்தி உண்டாகும்

 • கண் பார்வை பிரச்சனை உள்ளவர்கள் கேரட்டை அடிக்கடி சாப்பிட வேண்டும். இதனால் கண் பார்வை அதிகரிக்கும்.கண் சம்பத்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்து கண்ணுக்கு நல்ல கூர்மையான பார்வை அளிக்கிறது.
 • வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் உண்டாகும் மாலைக்கண் நோயை குணமாகும் கேரட்.
 • வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் சருமத்தில் வறட்சி ஏற்படுகிறது. இதிலிருந்து பாதுகாத்து, பொலிவான தோற்றத்தை தருகிறது.
 • வைட்டமின் சி சத்து நிறைந்துள்ள கேரட்டை உணவில் தினமும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி சரியாகும்.
 • மரபணு பாதிப்புகள், புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை தவிர்த்து ஆன்டி – ஆக்சிடண்டாக செயல்படுகிறது.
 • இதய நரம்புகளில் படியும் கொழுப்புகளை தவிர்த்து, இதயத்துக்கு பலத்தை கொடுக்கிறது.
 • பற்கள் சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
 • மூளை திறனை மேன்படுத்தும்.
 • நம் உடலில் உள்ள திடக்கழிவுகளை நீக்குவதில் நார்ச்சத்து பங்கு வகிக்கிறது. கேரட்டை உட்கொள்வதன் மூலம் நார்ச்சத்து அதிகரிக்கும்.
 • மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு கேரட் மிகவும் பயனுள்ளது.
 • சர்க்கரை நோய் உள்ளவர்கள், கேரட்டை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
 • கேரட்டுடன் ஏலக்காயை போடி செய்து பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும். புத்துணர்வு கிடைக்கும்.
 • கேரட்டுடன் தேன் சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.
 • ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை நீக்கி சீரான ரத்த ஓட்டத்தை தருகிறது .
 • உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி உடலை சுத்தமாக வைக்க உதவுகிறது.
 • கேரட்டுடன் முட்டை மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும்.


ஆண்கள் கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

 • ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
 • விந்தணுவின் அளவை அதிகரிப்பதோடு தரத்தையும் அதிகரிக்கும்.
 • செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும்.
 • வயிறு சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்து தீர்வு கிடைக்கும்.
 • வாயு தொல்லையை நீக்கும்.
 • கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது.
 • நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 • மலச்சிக்கலை சரிசெய்யும்.
Next Story
Share it