தாம்பத்ய உறவு அமோகமா இருக்க யோகா செய்யுங்க...!!

தாம்பத்ய உறவு அமோகமா இருக்க யோகா செய்யுங்க...!!

தாம்பத்ய உறவு அமோகமா இருக்க யோகா செய்யுங்க...!!
X

யோகா உடல் மற்றும் உள்ளத்தை புத்துணர்வாக்குவது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் யோகாவைப் பற்றிய் இன்னொரு பக்கம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம். தகுந்த ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் குறிப்பிட்ட ஆசனங்களை செய்துவந்தால் ஆண் பெண் தாம்பத்ய உறவு வலுப்பெறும் என்பது ஆச்சரியமான உண்மை.

உடலுறவு சிறப்பாக அமைய சில முறைப்படுத்தப்பட்ட யோகாசனங்கள் உள்ளன. மன அழுத்தம், புகை மற்றும் மதுப்பழக்கம், அதிக அளவு சர்க்கரை போன்றவை முழு திருப்தியை தடுப்பவை. ஆனால் யோகா தொடர்ந்து செய்து வர, மனம் அமைதியடையும், உடலில் ரத்த ஓட்டம் சீராகும் அது உடலின் எல்லா பாகங்களும் பாய்ந்து உற்சாகத்தை ஏற்படுத்தும்.

இதற்கு தீர்வு இந்த இரண்டே ஆசனங்கள் தான். அவை சவாசனம் மற்றும் வஜ்ராசனம்.சவாசனம் செய்யும் போது உடலில் ரத்த அழுத்தம் சீராகும், பதற்றம் மற்றும் தூக்கமின்மை நீங்கி உடல் புத்துணர்வு பெறும்.வஜ்ராசனத்தைப் பொறுத்தவரை ஜீரண சக்தியை மேம்படுத்தும். அதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.மொத்தத்தில் யோகாவை தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் உடல் மிகவும் வலிமைப் பெறுவதுடன் நீடத்த உடலுறவுக்கான உத்திரவாதமும் பெற முடியும் என்று சிறப்பு மருத்துவர்களும் யோகா நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

படுக்கையறை வாழ்க்கை சிறக்க யோகாவுடன் பிரணாயாமமும் முக்கியம். முடிந்தால் கும்பகம் எனப்படும் மூச்சுப் பயிற்சியையும் தகுந்த குரு மூலம் கற்றுக் கொண்டால் தாம்பத்ய உறவில் கவனம் குவிந்து மனம் மற்றும் உடலுக்கு அது மகிழ்ச்சியைத் தரும் என்கிறார்.யோகா செய்வதன் மூலம் கிடைக்கும் மற்ற நல்ல அனுகூலங்களைக் கவனத்தில் கொள்வதுடன் படுக்கை அறையிலும் கூட பேருதவி செய்கிறது என்பது மிகையில்லாத உண்மை.

Tags:
Next Story
Share it