1. Home
  2. ஆரோக்கியம்

கர்ப்பக்காலத்தில் நிம்மதியான தூக்கம் வர இதை செய்யுங்கள்!!



கர்ப்பிணிகளுக்கு எப்படி ஊட்டச்சத்து மிக முக்கியமோ அதே போன்று ஓய்வும் அவசியம்.கர்ப்பக்காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் கர்ப்பிணிகள் ஆழ்ந்த தூக்கம் பெறமுடியாது தவிக்கின்றனர்.

இரவில் ஆழ்ந்த தூக்கம் பெற வேண்டும் என்றால் இரவு தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்பே இரவு உணவை முடித்துவிட வேண்டும். அப்போதுதான் நெஞ்செரிச்சல், செரிமான கோளாறுகள் போன்றவை இல்லாமல் இருக்கும்.உணவுக்கு பிறகு கண்டிப்பாக 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். வேகமாக நடக்க வேண்டாம். பிறகு வெதுவெதுப்பான நீரில் குளித்து தளர்வான உடைகளை ( நைட்டி, நைட் ஷுட், காட்டன் புடவைகள் ) அணிந்துகொள்ளலாம்.

முன்கூட்டியே உணவை எடுத்துகொள்வதால் லேசாக பசி எடுக்கும். அதனால் இரவு தூக்கத்துக்கு முன்பு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் குடிக்கலாம். எப்போது தூக்கம் வருகிறதோ அப்போது சிறுநீர் கழித்துவிட்டு படுக்க வேண்டும். அதற்கு பிறகு அதிகம் நீர் சேர்க்க வேண்டாம்.கர்ப்பிணி பெண் மெத்தென்ற கட்டிலின் மீது தான் படுக்க வேண்டும் என்றில்லை. கீழே பாய்விரித்தும் படுக்கலாம். ஆனால் எங்கு படுத்தாலும் வசதியாக உடலுக்கு அசெளகரியம் நேராமல் பார்த்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக கர்ப்பக்காலத்தில் பயன்படுத்த வேண்டிய தலையணைகள் தனியாக கடைகளில் கிடைக்கும். சிலருக்கு கை, கால்களில் வீக்கம் உண்டாகும். இதற்கு தோதாக கால்களை சற்று மேலாக மெல்லிய தலையணை வைத்து உறங்குவதன் மூலம் கால் வீக்கம் குறையும். இந்த உபாதையால் தூக்கமும் கலையாமல் இருக்கும். பாயில் படுப்பதாக இருந்தால் இரண்டு பெட்ஷீட் போட்டு அதன் பிறகு படுக்கலாம்.

கர்ப்பிணிகள் எப்போதும் இடது பக்கம் படுத்தால் தான் நல்லது என்று சொல்வதுண்டு. அது மிகவும் நன்மை செய்யும். எல்லா நேரங்களிலும் இடது பக்கமே படுக்க முடியவில்லை என்று சொல்பவர்கள் சிறிது நேரம் வலதுபக்கமும் படுக்கலாம்.ஆனால் அப்படியே படுக்கையில் இருந்து திரும்பாமல் எழுந்து உட்கார்ந்து பிறகு திரும்பி படுக்க வேண்டும். திரும்பி படுத்தால் கொடி சுற்றி பிறக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் இது உண்மை அல்ல.

அதே நேரம் இரண்டாம் ட்ரைமெஸ்டர் காலத்துக்கு பிறகு கர்ப்பிணி மல்லாந்து படுக்க கூடாது. ஏனெனில் கர்ப்பப்பை ரத்தக்குழாய்களை அழுத்துவதால் மூச்சுத்திணறல் போதுமான ரத்த ஓட்டம் சீராக கிடைகாமல் போகலாம்.கருவின் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க குப்புறப்படுக்க முடியாது என்றாலும், கருவுற்ற முதல் மாதங்களில் சில பெண்கள் பழக்கதோஷத்தில் படுப்பதும் உண்டு. ஆனால் அவ்வாறு குப்புறப்படுக்க கூடாது.

Trending News

Latest News

You May Like