கிராமத்து ஸ்டைலில் சுவையான மட்டன் சுக்கா..!!
கிராமத்து ஸ்டைலில் சுவையான மட்டன் சுக்கா..!!

தேவையான பொருட்கள்:
மட்டன் – 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ் ஸ்பூன்
ப.மிளகாய் – 4
கருப்பு மிளகு – 1 டீஸ் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ் ஸ்பூன்
மல்லி – 2 டீஸ் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 10-15
சின்ன வெங்காயம் – 7 – 10
தக்காளி – 3
பட்டை – 2
ஏலக்காய் – 2
கருவேப்பிலை – சிறிது
கொத்த மல்லி – தே. அளவு
எண்ணெய் – தே.அளவு
உப்பு – தே.அளவு
செய்முறை:
மட்டனில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் பொடி சேர்த்து நன்கு 30 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளவும். பின்னர் 1 கப் தண்ணீர் ஊற்றி அதில் 4 ப. மிளகாய்யை கிள்ளி போட்டு 4 விசில் விட்டு நன்கு மட்டனை வேக விடவும்.
தற்போது கடாயில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், மல்லி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். இது நன்கு வதங்கியதும் தனியாக இதை அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், கருவேப்பிலை, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தற்போது அதில் தண்ணீர் ஊற்றி வேக வைத்த மட்டனை சேர்த்து 10 நிமிடங்கள் வேகவிடவும். கடைசியாக கொத்த மல்லி தூவி அடுப்பை அணைக்கவும். தற்போது சுவையான கிராமத்து ஸ்டைல் மட்டன் சுக்கா ரெடி.