இஞ்சி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்..!!

இஞ்சி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்..!!

இஞ்சி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்..!!
X

இஞ்சியிடம் தஞ்சம் அடைந்தால் அஞ்ச வேண்டாம் என்கிற அளவிற்கு சித்த மருத்துவ உலகில் நோய்க்கு தீர்வளிக்கும் அனைத்து மருந்துகளிலும் இஞ்சி இடம் பெறுகிறது. இஞ்சியாக பயன்படுவதோடு மட்டுமல்லாமல் காய்ந்த பிறகு சுக்காகவும் பயன்படுகிறது.
இஞ்சி நறுமணத்திர்க்காகவும் சமையலில் உணவின் ருசியை அதிகரிக்கவும் பெரிதும் உதவுகிறது. உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் மசாலா பொருட்களால் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சரி செய்ய இஞ்சி பயன்படுகிறது.

இஞ்சியின் மருத்துவ பயன்கள்

 1. தினசரி காலையில் இஞ்சி சாற்றை குடித்து வந்தால்,
  ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
 2. பசி எடுக்காமல் மந்தமாக உள்ளவர்கள் காலையில் இஞ்சியை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் பசியுணர்வு அதிகரிக்கும்.
 3. இஞ்சி சாறை பாலில் கலந்து குடித்து வருவதின் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
 4. பல்வலி ஏற்படும் போது இஞ்சியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரினால் வாயைக் கொப்பளித்து வந்தால் பல்வலி விரைவில் குணமடையும்.
 5. இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் செரிமான கோளாறுகள் நீங்கி வயிற்றில் தங்கியிருக்கும் தேவயற்றகொழுப்பு கரையும்.
 6. இஞ்சியை துவையலாக அரைத்து சாப்பிட்டு வர வாந்தி,பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் ஆகியவை ஏற்படாது.
 7. சளி,இருமல்.ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் தினமும் காலை,இரவு என இரண்டு வேளையும் இஞ்சி சாருடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
 8. பெண்கள் மாதவிடாய் ஏற்படும் காலங்களில் இஞ்சி சார்ந்த உணவு பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் மாதவிடாயினால் ஏற்படும் வயிற்று வலி குறையும்.
 9. இஞ்சியில் இருக்கும் காரத்தன்மை மிகுந்த வேதிபொருள் கிருமிகளையும் அழிக்கும் திறன் கொண்டது.
 10. சிறிதளவு இஞ்சியை தட்டி சிறிதளவு தேநீரில் போட்டு கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் நம் உடலில் இஞ்சியின் மருத்துவ குணம் நிறைந்து நன்மை அளிக்கும்.
 11. குழந்தைகளுக்கு இஞ்சியை நேரடியாக கொடுத்தால் சாப்பிடமாட்டார்கள். அதனால் அவர்களுக்கு உண்ணும் உணவுபொருட்களில் கலந்து கொடுப்பதின் மூலம் பசியின்மை ஏற்படாது, நன்கு ஜீரணம் ஆகும்.
 12. மசாலா நிறைந்த அசைவ உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் அஜீரணம் ஏற்படுகிறது. எனவே அசைவ உணவு சாப்பிட்டவுடன் ஒரு துண்டு இஞ்சியை மென்று சாப்பிட்டு வெந்நீர் அருந்தினால் உடனடியாக ஜீரணமாகிவிடும்.

Next Story
Share it