1. Home
  2. ஆரோக்கியம்

வாயை திறந்து கொண்டு தூங்குவதால்.........!!



இரவு முழுக்க வாயை திறந்தபடி ஒரு நபர் உறங்குவதால் அவரது உடலில் என்னென்ன மாற்றங்கள், ஆரோக்கிய அபாயங்கள் உண்டாகின்றன என்று இங்கு பார்க்கலாம்...

01.வாயை திறந்த படி நீண்ட நேரம் தூங்குவதால் வாய் துர்நாற்றம் அதிகரிக்கும். வாயில் பாக்டீரியாக்கள் தாக்கம் அதிகரிக்கும்.நமது வாயை பாதுகாக்கும் சுரப்பி எச்சில் ஆகும். ஒருவர் வாயை திறந்தபடி உறங்குவதால் எச்சில் வறட்சி அடைந்து போகிறது. இது பற்களின் ஆரோக்கி யத்திலும் வெகுவாக பாதிப்பை உண்டாக்கு கிறது.

02.வாயை திறந்து தூங்கும் போது வாயில் அமில தன்மை அதிகரித்து பல் சொத்தை, பல் அரிப்பு போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்

03.ஆஸ்துமா மற்றும் தூக்கமின்மை கோளாறு உள்ளவர்களுக்கு இதன் காரணமாக வாயில் சொத்தை பற்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

நேராக படுத்து உறங்குவதை தவிர்த்து, இடது புறமாக படுத்து உறங்குவதால் வாய் திறந்து தூங்கும் பழக்கம் குறையும். இதனால் பற்களின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

அதே குழந்தைகள் வாயைத் திறந்து தூங்குவது சில பிரச்சனைகளின் எதிரொலி. இதை பெற்றோர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தூங்கும் போது மூக்கு வழியாக சுவாசிக்காமல் வாய்வழியாக சுவாசிக்கிறார்கள். இது அவர்களின் மேல் சுவாச பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். இப்படி வாயைத் திறந்து தூங்குவதை நீங்கள் கண்டுக்காமல் விட்டால் அவர்கள் வளர்ந்த பிறகு சில சிக்கல்களை அனுபவிக்க கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள்

வாயை திறந்து கொண்டு தூங்குவதால்.........!!

குழந்தைகள் எப்போதும் மூக்கின் வழியாகத் தான் சுவாசிக்கிறார்கள். ஆனால் 3-4 மாதமுடைய குழந்தைகள் தூங்கும் போது மூக்கிற்கு பதிலாக வாய்வழி சுவாசத்தை மேற்கொள்கிறார்கள். இப்படி அவர்கள் வாய்வழியாக சுவாசிக்க ஒரே காரணம் அவர்களின் நாசி பாதை தடைபட்டு இருப்பதே ஆகும். இது உங்க குழந்தையின் மேல் சுவாசப் பாதையில் அடைப்பு இருப்பதை காட்டுகிறது. இது ஒரு சில ஒவ்வாமை தொற்றால் ஏற்படலாம். இதை அப்படியே விடும் போது இன்னும் சில சிக்கலான நிலைக்கு இழுத்துச் செல்ல வாய்ப்புள்ளது. வாய் வழியாக சுவாசிப்பது உங்க குழந்தைக்கு என்றும் பலனளிக்காது. ஏனெனில் வாய்வழியாக சுவாசிக்கும் போது உங்க உடலுக்கு குறைந்த அளவு ஆக்ஸிஜன் மட்டுமே கிடைக்கும். அதே மாதிரி உங்க மூக்கு தான் பாக்டீரியா மற்றும் காற்றில் இருக்கும் தூசி மாசுக்களை வடிகட்ட உதவும். இதுவே நீங்கள் வாய்வழியாக சுவாசித்தால் இந்த செயல்கள் எல்லாம் நடக்காது

மேலும் வாய் வழியாக சுவாசிக்கும் போது குறைந்த அளவு ஆக்ஸிஜன் மட்டும் கிடைப்பதால் காலப்போக்கில் குழந்தைக்கு இதய பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. மேலும் அவர்கள் மூக்கால் சுவாசிக்கும் குழந்தைகளைப் போல நிம்மதியாக தூங்குவதில்லை. எனவே அவர்களின் ஆரோக்கியத்தில் ஒட்டுமொத்த விளைவுகள் ஏற்படுகிறது என்கிறார்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள்.

Trending News

Latest News

You May Like