1. Home
  2. ஆரோக்கியம்

மிஸ் பண்ணாம சாப்பிட வேண்டிய 7 பஞ்சாபி ஸ்ட்ரீட் ஃபுட்..!!

மிஸ் பண்ணாம சாப்பிட வேண்டிய 7 பஞ்சாபி ஸ்ட்ரீட் ஃபுட்..!!


பஞ்சாபி மக்களிடைய பிரபலமாக உள்ள உணவுகளில் 7 ருசியான ஸ்ட்ரீட் ஃபுட் ஐட்டங்களைப் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

அமிர்தசரஸ் குல்ச்சா: பஞ்சாபின் புனித நகரமான அமிர்தரசஸ்க்கு சென்றால் மறக்காமல் அங்குள்ள தெருக்கடைகளில் தயாரிக்கப்படும் அமிர்தரசஸ் குல்ச்சாவை கட்டாயம் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்.நிறைய வெண்ணெய்யில் பொரித்து எடுக்கப்படும் குல்ச்சா மொறுமொறுவென வெளிப்புறத்தில் இருந்தாலும் உள்ளே மென்மையாக இருக்கும். சாப்பிடுவதற்கு ஏக ருசியாக இருக்கும். உணவுப்பிரியர்களுக்கு மிகச்சிறந்த ட்ரீட் இது.


மிஸ் பண்ணாம சாப்பிட வேண்டிய 7 பஞ்சாபி ஸ்ட்ரீட் ஃபுட்..!!

சோலே பட்டூரே : வட இந்தியர்களின் பிரதான உணவான சோலே பட்டூரே பஞ்சாபிலும் மிகப்பிரபலம். வாரத்தில் ஒருநாள் அவர்களது வீட்டில் சோலே பட்டூரே இடம் பெற்றிருக்கும்.


மிஸ் பண்ணாம சாப்பிட வேண்டிய 7 பஞ்சாபி ஸ்ட்ரீட் ஃபுட்..!!

பன்னீர் டிக்கா: சைவப்பிரியர்களுக்கு மிகவும் உகந்த உணவு இது. பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி அதில் கம்பியில் துளைத்து தந்தூர் அடுப்பில் ரோஸ்ட்டாக வறுத்து எடுக்க வேண்டும். அதைப் பார்த்தாலே யாருக்கும் நாக்கில் எச்சில் ஊறும். தேவையான பொருட்கள்- பன்னீர் - அரை கிலோ தக்காளி - 1 வெங்காயம் -1 குடைமிளகாய் - 1 சீரகம் - அரை டீஸ்பூன் காய்ந்த மல்லி - அரை டீஸ்பூன் பிரவுன் ஏலக்காய் -1 பச்சை ஏலக்காய் - 10 கிராம்பு - அரை டீஸ்பூன் குறுமிளகு - அரை டீஸ்பூன் அன்னாசிப்பூ - 2 சீரகம்- அரை டீஸ்பூன் இஞ்சிப்பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன் சிவப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மல்லித்தூள் - 2 டீஸ்பூன் உப்பு - 2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் ரீபைண்டு எண்ணெய் - அரை டீஸ்பூன் எலுமிச்சை - 2 உலர்ந்த மாங்காய்த்தூள் (ஆம்ச்சூர்) - அரை டீஸ்பூன் சாட் மசாலா - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய்- 2 நன்கு அடித்த தயிர் - 100 கிராம் கரம் மசாலா - அரை டீஸ்பூன் மல்லித்தழை- சிறிதளவு புதினாத்தழை - சிறிதளவு செய்முறை- 1.வாணலியில் வெறுமனே சீரகம், காய்ந்த மல்லி, பிரவுன் மற்றும் பச்சை ஏலக்காய், கிராம்பு, குறுமிளகு, அன்னாசிப்பூவை வறுத்துப் பொடித்து வைக்கவும். 2.ஒரு பாத்திரத்தில் இஞ்சிப்பூண்டு பேஸ்ட், மஞ்சள்தூள், சிவப்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய்த்தூள், ரீபைண்டு எண்ணெய், நறுக்கிய மல்லித்தழை, புதினா, எலுமிச்சை சாறு, ஆம்ச்சூர் பவுடர், தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். பன்னீர் டிக்கா செய்முறை - 1.ஒரு டிரேயில் பன்னீர் துண்டுகள், அரிந்த வெங்காயம், குடைமிளகாய், தக்காளியை எடுத்துக் கொள்ளவும். 2. அத்துடன் மசாலா பொருட்களை சேர்த்து கலக்கவும். பன்னீரில் மசாலை பொருட்களை பூசி விடவும். 3.கம்பிகளில் பன்னீர், வெங்காயம், குடைமிளகாய், தக்காளியை ஒன்றன்பின் ஒன்றாகக் கோத்து விடவும். 4.மசாலா பூசிய பன்னீர் டிக்காவை பிரிட்ஜில் 45 நிமிடங்கள் வைத்திருக்கவும். 5. பின்னர் அதை எடுத்து தந்தூரி அடுப்பில் நன்கு வேகவிடவும். 6. சுடச்சுட பன்னீர் டிக்காவை பரிமாறுங்கள். டிக்காவுடன் புதினா சட்னி மிகச்சுவையாக இருக்கும்.

லஸ்ஸி: பஞ்சாபிகளுக்கும் லஸ்ஸிக்கும் ஏகப்பொருத்தமாக இருக்கும். நல்ல கெட்டியான தயிரில் செய்யப்படும் லஸ்ஸி ஒவ்வொரு வாய் எடுத்து சாப்பிடும்போதும் வாயில் தித்திக்கும்.

5. தஹிபல்லா : மொறுமொறுவென பருப்பு வடையை தயிரில் ஊறவைத்து அதில் காரம், இனிப்பு கலந்த சட்னியை ஊற்றி இந்த தஹிபல்லாவை தருகின்றனர்.சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.


மிஸ் பண்ணாம சாப்பிட வேண்டிய 7 பஞ்சாபி ஸ்ட்ரீட் ஃபுட்..!!

ஆலு டிக்கி: சாட் உருளைக்கிழங்கில் செய்யப்படும் இந்த மொரமொரப்பான ஆலு டிக்கி சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். புளிப்பான கொத்துமல்லி, புளிக்கரைசல் சட்னியைத் தொட்டுக் கொண்டு விரும்பும் அளவுக்கு சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் - தோல் உரித்த உருளைக்கிழங்கு - 4 காய்ந்த மல்லி - அரை டீஸ்பூன் மிளகு - அரை டீஸ்பூன்சீரகம் - அரை டீஸ்பூன் வேகவைத்த பச்சைப்பட்டாணி - அரை கப் கல் உப்பு - 2 டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட் - 2 டீஸ்பூன் ரிபைண்டு எண்ணெய் - 100 மிலி வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 நறுக்கிய கொத்துமல்லித்தழை - 1 கொத்து சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் செய்முறை - 1. காய்ந்த மல்லி, மிளகு, சீரகத்தை ஒரு பேனில் வறுக்கவும். மிக்சியில் இதை அரைத்து பொடியாக்கி வைக்கவும். 2. ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை மசிக்கவும். மற்றொரு பாத்திரத்தில் பாதி பச்சைப்பட்டாணியை மசிக்கவும். 3. இரண்டையும் நன்கு கலக்கி இஞ்சி பேஸ்டை சேர்க்கவும். 4. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கவும். அத்துடன் ஆலு டிக்கி கலவையை சேர்த்து வதக்கவும். 5. உப்பு, வறுத்த மசாலா பொடி, பச்சை மிளகாய், மல்லித்தழை, சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். இதில் அரை டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கிளறி விடவும். 6. ஆலு டிக்கி கலவையை எடுத்து சிறிய உருண்டைகளாகப் பிடித்து அரைமணிநேரம் பிரிட்ஜில் வைக்கவும். 7. வாணலியில் அந்த உருண்டைகளை பொரித்து எடுக்கவும். சுவையான ஆலு டிக்கி ரெடி.


மிஸ் பண்ணாம சாப்பிட வேண்டிய 7 பஞ்சாபி ஸ்ட்ரீட் ஃபுட்..!!


அமிர்தசரஸ் மச்சி: பஞ்சாபில் பிரபலமான சிக்கன் மட்டன் கபாப்களுக்கு இணையாக இந்த அமிர்தசரஸ் மச்சி உணவுப்பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. காரசாரமாகவும், நல்ல மணத்துடன் இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். தேவையான பொருட்கள் - வஞ்சிரம் மீன் துண்டுகள்- 300 கிராம் கெட்டித் தயிர் - 2 டேபிள்ஸ்பூன் சீரகத்தூள் - 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் இஞ்சிப்பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சிறிய துண்டு உப்பு - தேவைக்கேற்ப செய்முறை - 1. மீன்துண்டுகளை கெட்டித்தயிர், மிளகாய்த்தூள், இஞ்சிப்பூண்டு பேஸ்ட், மஞ்சள்தூள் கலவையில் நன்கு பூசி விடவும். 2. வாணலியில் எண்ணெய் ஊற்றி மசாலா தடவிய மீன்துண்டுகளை 5 நிமிடங்களுக்கு வதக்கி விடவும். 3. பொரித்த மீன்துண்டுகளை ஒரு பிளேட்டில் வைத்து அதன் மேல் மல்லித்தழையை பரவத் தூவவும். 4. புதினா சட்னியுடன் பரிமாறவும். 5. சிறிய துண்டு எலுமிச்சையையும் தரலாம்.






Trending News

Latest News

You May Like