1. Home
  2. ஆரோக்கியம்

100 வருஷம் ஈஸியா வாழலாம்!! இதை ஃபாலோ பண்ணுங்க!! உயிர் காக்கும் நேர அட்டவணை!!

100 வருஷம் ஈஸியா வாழலாம்!! இதை ஃபாலோ பண்ணுங்க!! உயிர் காக்கும் நேர அட்டவணை!!


இயந்திரத்தனமான நமது வாழ்க்கை முறையில் நம் உடல் நலத்தை பேணவும், ஆரோக்கியமான வாழ்விற்கான சூழலை உருவாக்கவும் நேரங்களை நம்மால் தினந்தோறும் ஒதுக்க முடிவதில்லை. 
நமது தினசரி நடைமுறைகளை செய்ய முடிவது மட்டுமே ஆரோக்கியம் கிடையாது.  நாம் வாழும் காலம் வரை நோயின்றி வாழ்வது தான் முழு ஆரோக்கியம். நம்  உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு கால அட்டவணை உண்டு. உடல் உறுப்புக்களின் செயல்பாடுகளுக்கேற்ப அந்தந்த நேரத்தில் கடைப்பிடித்து வாழ்வதே ஆரோக்கியமான வாழ்வு.
இந்தக் கால அட்டவணையை  முறைப்படி  பின்பற்றினால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமும் வராது. மருந்து சாப்பிட வேண்டிய கட்டாயமும்  இல்லை. 


உடல் உறுப்புகளின் நேரம், நாம் செய்ய வேண்டியவைகளும் பயன்களும்


காலை 3 மணி முதல் 5 மணி வரை   நுரையீரலுக்கான நேரம். இந்த நேரத்தில் மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் செய்தல் வேண்டும். ஆயுள் வளமாக இருக்கும்

காலை 5 மணி முதல் 7 மணிவரை பெருங்குடலுக்கான நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். மலச்சிக்கல் ஏற்படாது.

காலை 7 மணிமுதல் 9 மணிவரை வயிற்றிற்கான நேரம். இந்த நேரத்தில் சாப்பிட வேண்டும். நன்கு ஜீரணமாகும்

காலை 9 மணி முதல் 11 மணிவரை மண்ணீரலுக்கான நேரம். நம் வயிற்றில் விழும் உணவை செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக்கூடாது. தண்ணீர் கூட குடிக்கக்கூடாது.

காலை 11 மணி முதல் 1 மணிவரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 1 மணி முதல் 3 மணிவரை சிறுகுடலுக்கான நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

பிற்பகல் 3 மணிமுதல் 5 மணிவரை சிறுநீர்ப் பையின் நேரம். நம் உடலில் உள்ள நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

மாலை 5 மணிமுதல் 7 மணிவரை சிறுநீரகங்களின் நேரம். தியானம் மற்றும் இறைவழிபாடு செய்வதற்கு ஏற்ற நேரம்.

இரவு 7 மணிமுதல் 9 மணிவரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.

இரவு 9 மணிமுதல் 11 மணிவரை உச்சந்தலை முதல் அடிவயிறு வரையுமான நேரம். அமைதியாக உறங்க வேண்டிய நேரம்.

இரவு 11 மணிமுதல் 1 மணிவரை பித்தப்பைக்கான நேரம். இந்த நேரத்தில் நிச்சயமாக நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டும். 

இரவு 1 மணிமுதல் விடியற்காலை 3 மணிவரை கல்லீரலுக்கான நேரம். இந்த நேரத்தில் தான் நமது உடலில் உள்ள ரத்தத்தைக் கல்லீரல் சுத்தப்படுத்தும். 

நமது உடலின் இயக்கத்தை இந்த நேர அட்டவணைப்படி கூடுமானவரை கடைப்பிடித்து வாருங்கள். அப்புறம் உங்கள் வாழ்வில் என்றென்றும் ஆரோக்கியம் தான்!!
 

Trending News

Latest News

You May Like