பெண்கள் மெட்டி அணிய காரணம் என்ன தெரியுமா?

பெண்கள் மெட்டி அணிய காரணம் என்ன தெரியுமா?
X

பழங்காலத்தில் திருமணமான ஆணுக்கு மெட்டியும், பெண்ணுக்கு தாலியும் அடையாள அணிகலன்கள் ஆகும். ஒரு ஆண் திருமணமானவன் என்பதனை, அவனின் பாதங்களைப் பார்க்கும் பெண் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்களின் கால்களில் மெட்டி அணிவிக்கப்பட்டது. காலமாற்றத்தினால் அல்லது கலாச்சார மாற்றத்தினால் மெட்டி, பெண்ணுக்குரிய அணிகலனாகியது.

இந்தியாவின் சில பகுதிகளில் திருமணமான பெண்களுக்கு நிகழும் ஒரு முக்கியச் சடங்கு 'மெட்டி அனிதல்'. உத்தர பிரதேசம் மற்றும் பீகார் போன்ற வட இந்திய மாநிலங்களில் திருமணமான பெண்கள் பொதுவாக பிச்சியா என்று அழைக்கப்படும் மெட்டிகளை அணிவர்.

தென்னிந்தியாவில் பெண்கள் தங்களது கால்விரல்களில் மெட்டிகளை அணிகின்றனர். இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தில் மெட்டி அணிவது கருப்பை நரம்புடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும், கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவிதத் தொடர்பு உண்டு. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. எனவே, பெண்கள் காலில் மெட்டி அணிவதால் கருப்பைப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அந்த மெட்டியும் வெள்ளியில் செய்ததாக இருக்க வேண்டும்.

வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களில் இருந்து நிவாரணம் தரும் ஆற்றல் கொண்டது.

பெண்களின் கர்ப்பக் காலத்தில் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படுகின்றன. கர்ப்பகாலத்தின் போது இந்தக் கால் விரல் நரம்பினை அழுத்தித் தேய்த்தால் மேற்கண்ட வலிகள் குறையும். வெள்ளியிலான மெட்டி அணிந்து நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்ந்து வலியைக் குறைக்கிறது.

Next Story
Share it