எவர் ஒருவர் ஒரு நாள் காலையில் முட்டை உணவுகளை எடுத்துக்கொள்கின்றாரோ...

எவர் ஒருவர் ஒரு நாள்  காலையில் முட்டை உணவுகளை எடுத்துக்கொள்கின்றாரோ...
X

காலையில் முட்டை உணவுகளை எவர் ஒருவர் எடுத்துக்கொள்கின்றாரோ அவர் அன்றைய நாளுக்கான முழு சத்தையும் பெறுகிறார் .முட்டையை பொரியல் மற்றும் ஆம்லெட்டாக எடுத்து கொள்வதை விட அவித்து சாப்பிடுவது உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை கொடுக்கிறது .ஏனெனில் முட்டையை வறுத்து சாப்பிடும்போது அதில் உள்ள ஊட்ட சத்துக்களில் பாதிப்பு ஏற்படும் .அதனால் அதை வேக வைத்து சாப்பிடுவதால் அதிக நன்மை கிடைக்கும் .இந்த முட்டை குளிர்காலத்திற்கு ஏற்ற உணவாகும் .இது நம் இதயத்திற்கு அதிக நன்மை கொடுக்கிறது .இந்த வேக வைத்த முட்டையில் விட்டமின் டி உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ,எலும்பின் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும் .முட்டையின் மூலம் நாம் ஆரோக்கியமான மூளை மற்றும் முடி வளர்ச்சியை பெறலாம் .மேலும் சருமத்திற்கு நன்மை செய்யும் இது நமக்கு எடை குறைப்புக்கு வழி செய்யும் .ஏனெனில் இதில் குறைந்த கலோரிகள் உள்ளது .மேலும் வேக வைத்த முட்டையின் நன்மைகளை பார்க்கலாம்

1.அதிக அடர்த்தி கொண்ட நல்ல கொழுப்பு வேகவைத்த முட்டைகளை சாப்பிட்ட பிறகு அதிகரிக்கிறது.

2.நீங்கள் முட்டைகளை சாப்பிடும் போது கல்லீரல் குறைந்த கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது. எனவே இது எல்லாவற்றையும் சமன் செய்கிறது.

3.வேகவைத்த முட்டைகள் தொடர்ந்து HDL எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றன. பல ஆய்வுகள் உயர் HDL அளவுகள் இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற நோய்களின் ஆபத்தை குறைக்கின்றன என்பதை நிரூபிக்கின்றன.

4.காலை உணவில் முட்டை எடுத்துக் கொண்டால், அன்றைய நாளில் உங்கள் உடலுக்கு தேவையான எனர்ஜி முழுமையாக கிடைக்கும். குறிப்பாக, நீண்ட நேரம் பணி செய்பவர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும்.

5.மூளை செயல்பாட்டுக்கு அத்தியாவசியமாக உள்ள கோலின் என்ற சத்து முட்டையில் உள்ளது. இது மட்டுமல்லாமல் முட்டையில் 100 முதல் 500 மில்லி கிராம் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. கோலின் மற்றும் ஒமேகா ஃபேட்டி ஆசிட் ஆகிய இரண்டுமே மூளை செயல்பாட்டை மேம்படுத்தக் கூடியதாகும்.

6.முட்டையில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்பது இதய நோய் அபாயங்களை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடல் உள்ளுறுப்புகள் வீக்கம் ஏற்படுவதை தடுக்க உதவும்.

7.முட்டையின் மஞ்சள் கருவில், உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும் எல்டிஎல் கொழுப்பு இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. ஆனால், உண்மையில் இது உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்பு ஆகும். உடலுக்கு நன்மை பயக்கு ஹெச்டிஎல் கொழுப்பு முட்டையில் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

8.இதய நோய் பாதிப்புகள் அல்லது நீரிழிவு போன்ற பிரச்சினைகள் இல்லாவிட்டால் தினசரி முட்டை சாப்பிடலாம். அதே சமயம், அவரவர் உடல் தேவையைப் பொருத்து ஒன்று அல்லது இரண்டு முட்டைக்கு மேல் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

ஆரோக்கியமான இதயத்துக்கு தரமான புரதச்சத்தும் அவசியம். எனவே, முட்டை சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம்.தினமும் ஒரு முட்டை, நல்ல உணவு, முறையான உடற்பயிற்சி என்று வாழ்ந்தால், மகிழ்ச்சியான வாழ்வை நிச்சயம் பெறலாம்.

Next Story
Share it