ஒரு சொட்டு எண்ணெய் போதும் ஆரோக்கியமாக வாழ... எப்படி தெரியுமா ?

நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஓர் அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்னை அவரது கண்களுக்கு ரத்தம் வழங்கும் நரம்புகளில் ரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று கண் மருத்துவர்கள் கை விரித்து விட்டனர்.
இந்தநிலையில் அவரது தொப்புளில் 3 சொட்டு தேங்காய் எண்ணெய் இரவில் படுக்கும் முன்பாக இடப்பட்டது. பின்னர் அவரது தொப்புளைச் சுற்றிலும் மென்மையாக மசாஜ் செய்யப்பட்டது. இதுபோல தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவரது இடது கண் பார்வை பழைய நிலைமைக்கு வந்தது.
அறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.
நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
தாயின் கருவறையில் வளர ஆரம்பிக்கும் போதே குழந்தை தனக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தொப்புளில் இருந்தே பெறுகிறது. இதனால் உடலின் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில்தான் அமைந்துள்ளது.
உடலின் அனைத்து நரம்புகளையும் கட்டுப்படுத்தும் சக்தி தொப்புளுக்கு உள்ளது என்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனைப் பராமரிக்கும் விதம் குறித்தும் இதில் தினமும் சில துளிகள் எண்ணெய் விடுவதால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது குறித்தும் இப்பதிவில் காணலாம்.
வாயுக் கோளாறுகள் இருப்பவர்கள் சிறிது பெருங்காயத்தை நீரில் கரைத்து தொப்புளில் தடவினால் உடனடியாக சரியாகிவிடும். கம்ப்யூட்டர் , மொபைல் தொடர்ந்து பார்ப்பதால் உண்டாகும் கண் வறட்சியைப் போக்க தொப்புளில் நீங்கள் தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும்.
உடல் சூட்டினால் உண்டாகும் பித்த வெடிப்பை குணப்படுத்தவும், சருமத்தை பளபளப்பாக்கவும் தினமும் இரவில் படுக்கைக்கு செல்லும் முன் இரண்டு சொட்டு நல்லெண்ணெய் விடுவது நல்லது.
முழங்கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகிறது. கால் குடைச்சல் இருப்பவர்கள் இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் விடலாம். வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது.
தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்வதால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும் இவை அனைத்தும் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இவற்றை பின்பற்றி ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுப்போம்.