1. Home
  2. ஆரோக்கியம்

வெறும் வயிற்றில் எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது தெரியுமா ?


காலையில் எழுந்து ஒரு நாளை தொடங்கும் பொழுது என்ன உணவை முதலில் சாப்பிட வேண்டும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் காலையில் சாப்பிடக்கூடிய முதல் உணவு உங்களை நாள் முழுவதும் எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.

நல்ல ஆரோக்கியமான உணவை நீங்கள் காலையில் எடுத்துக் கொள்ளும் பொழுது உங்கள் மனநிலையையும், உடல் வலிமையையும் மேம்படுத்துகிறது. நல்ல ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் சாப்பிடுவதும் முக்கியம். ஒரு சில உணவுகள் காலையிலேயே நம்முடைய வயிற்றில் பிரச்சினையை ஏற்படுத்தி செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அப்படி முதலில் காலையில் என்ன உணவுகளை சாப்பிடலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் பப்பாளியை சாப்பிடலாம். பப்பாளியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. மேலும் இது உங்களுடைய குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்று. இது நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் பகல் முழுவதும் உங்களை ஒரு மென்மையான உணர்வோடு இருக்க வைக்கும்.

காலையில் எழுந்தவுடன் தர்பூசணி பழத்தை சாப்பிடலாம். தர்பூசணி பழம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. காலையில் எழுந்தவுடன் இதை சாப்பிட்டால் எந்த தீங்கும் ஏற்படாது. கோடை காலத்தில் தர்பூசணி அருமையான ஒரு பழம். இது உங்களுடைய உடலை நீர்ச்சத்து குறையாமல் பாதுகாத்துக் கொள்கிறது. மேலும் காலையில் தர்பூசணி பழத்தை எடுத்துக்கொள்வது குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. இதில் லைகோபீன் உள்ளது, இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

காலையில் வெறும் வயிற்றில் பேரிச்சம் பழத்தை சாப்பிடலாம். பேரிச்சம்பழம் செரிமானத்தை அதிகரிக்கிறது. வயிற்றில் பிஹெச் அளவை சமநிலைப்படுத்துகிறது.

காலை உணவாக சியா விதைகளை எடுத்துக் கொள்ளலாம். இது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிடுவது நல்லது. இதில் நார்ச்சத்து, கால்சியம், புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், மெக்னீசியம் அதிகம் உள்ளது. இதனால் மனநிலை தெளிவாகும். மேலும் செரிமான பிரச்சனைகள் இருக்காது. சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாம். அல்லது நேரடியாகவும் சாப்பிடலாம்.

காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை பழத்தை சாப்பிடலாம். இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது அதிக பலனை கொடுக்கும். உலர்திராட்சை உங்களுடைய ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த ஒன்று.

காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த பாதாம் பருப்பை சாப்பிடலாம். தற்பொழுது ஊறவைத்த பாதாம் பருப்பு காலையில் பலரால் உட்கொள்ளப்படுகிறது. இரவில் ஊற வைத்த பாதாமை காலையில் நீங்கள் சாப்பிடும் பொழுது செரிமானம் எளிதாகிறது.

சிட்ரஸ் பழங்கள் ஆரோக்கியமானது. ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்களை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி, கிவி, எலுமிச்சை, கொய்யா போன்ற சிட்ரஸ் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை காலையில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இவைகளில் இருக்கக்கூடிய அதிக பிரக்டோஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளடக்கம் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். மேலும் காலையிலிருந்து உங்களுடைய வயிற்றில் ஒருவித மந்த நிலையை ஏற்படுத்தி நாள்முழுவதும் உங்களை மகிழ்ச்சி அற்றதாக மாற்றும்.

காலையில் வெறும் வயிற்றில் பச்சை காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை கடினமாக்குகிறது. செரிமானம் செய்வதில் கடினமாக இருக்கும் பொழுது அது அந்த நாளை மகிழ்ச்சி அற்றதாக மாற்றும். மேலும் இது வாயுத் தொல்லை அதிகரிக்கும். வயிற்று வலியை ஏற்படுத்தும். காலையில் வெறும் வயிற்றில் சாலட் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

பேக்கரி பொருட்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். கேக், பீட்சா போன்ற பேக்கரி பொருள்கள் பலருக்கும் பிடித்த காலை உணவாக இருக்கும். ஆனால் இந்த உணவுகளில் ஈஸ்ட் காணப்படுகிறது. இதை காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் உட்கொள்ளும் பொழுது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் வாயு தொந்தரவை ஏற்படுத்தும். இரைப்பை பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். காலையில் எழுந்தவுடன் எந்தவிதமான பேக்கரி பொருட்களையும், இனிப்பு பொருள்களையும் சாப்பிடக்கூடாது.

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காரமான உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. காரமான உணவுகள் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் காலையில் மலம் கழிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். காலையில் வெறும் வயிற்றில் காரமான உணவுகளை எடுத்துக் கொண்டால் அது வயிற்றில் பிரச்சினைகளை ஏற்படுத்தி அந்த நாள் முழுவதும் உங்களை ஒருவித குழப்பத்தில் வைத்திருக்கும்.

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிடக் கூடாது. பதப்படுத்தப்பட்ட சர்க்கரை வெறும்வயிற்றில் சாப்பிட கூடாத மோசமான உணவு வகைகளில் ஒன்று. காலைநேரத்தில் சாக்லேட் மட்டுமல்ல சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட இனிப்பு பானங்கள் இப்படி இனிப்பு கலந்த எந்த பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like