என்னப்பா சொல்றீங்க..!! முட்டைகளை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக் கூடாதா..?

என்னப்பா சொல்றீங்க..!! முட்டைகளை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக் கூடாதா..?
X

நம் வீட்டில் ஓர் அங்கமாகிப்போன முட்டையை குளிர் சாதன பெட்டியில் வைப்பது வழக்கம். அப்படி நாம் வைத்தால் என்னென்னெ பாதிப்புகள் வரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

முட்டையை வாங்கி குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதால் முட்டையின் சுவை கெட்டுப்போவது மட்டுமின்றி, அதனால் உண்டாகும் பாதிப்புகளும் அதிகம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அறை வெப்பநிலையில் பராமரிக்கப்படும் முட்டைகளை விடவும், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் முட்டைகள் மிக விரைவாக கெட்டுப்போய் விடும். மேலும், பாலைப்போல் திரிந்து விடும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.ஏனென்றால் முட்டைகளில் விரைவில் பாக்டீரியா தொற்று உண்டாகிவிடும் அபாயம் உள்ளது. குறிப்பாக வயிற்றிற்கு கேடு விளைவிக்கும் "சால்மோனெல்லா" வகை பேக்டீரியா முட்டைகளின் ஓடுகளில் உருவாகும்.

ஆகவே முட்டையை வாங்கிய உடனே சமைத்து விட வேண்டும். இல்லையெனில் அறை வெப்ப நிலையிலேயே முட்டையை பராமரிக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குளிர்சாதனப் பெட்டியில் முட்டைகளை வைப்பதன் காரணமாக, முட்டைகளின் இயற்கையான சுவையும் மாறி விடும்.மேலும் அதன் சத்துக்களும் போய் விடும் என்று எச்சரிக்கின்றனர் சுகாதார வல்லுநர்கள்


Next Story
Share it