இது தெரியாம போச்சே ? இந்த உணவுகளுடன் நெய் சேர்க்கவே கூடாது!

இது தெரியாம போச்சே ? இந்த உணவுகளுடன் நெய் சேர்க்கவே கூடாது!
X

தினமும் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வர உடல் வெப்பநிலை சீராக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால் சில நேரங்களில் நெய்யைத் தவிர்க்கவும் ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

  • உப்பு சேர்க்காத உணவில் நெய் சேர்த்துச் சாப்பிடவே கூடாது.
  • ஆறிய உணவிலும் நெய்யை சேர்த்து சாப்பிடுவது செரிமானப் பிரச்சனைகளை தூண்டிவிடும்.
  • ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவுகளில் நெய் சேர்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.
  • பாசிப்பருப்புடன் நெய் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு சரியான அளவில் ஊட்டச்சத்துக்கள் சேர உதவி செய்யும்.
  • இது தவிர அசைவ உணவுகளான பிரியாணி, சிக்கன் கிரேவி, சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், மீன், முட்டை, இறால் போன்றவைகளில் நெய் சேர்த்து சாப்பிடக் கூடாது.ஏற்கனவே அசைவ உணவுகளில் போதிய அளவுக்கு மேல் கொழுப்புச் சத்து இருக்கும். இரண்டிலும் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்ந்தால் செரிமானக் கோளாறு, உயர் கொலஸ்டிரால், உடல் பருமன், தொப்பை போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.
  • நெய்க்கு கபத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அதனால் மழைக்காலத்தில் நெய் சாப்பிடுவதை தவிருங்கள்.
நெய் சாப்பிடுவதன் நன்மைகள்

தினமும் உணவில் நெய் சேர்ப்பது உடல் நலத்தை மேம்படச் செய்யும். உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வைத் திறனை மேம்படுத்துவதிலும் நெய்யின் பங்கு அதிகம்.

நெய் மலச்சிக்கலை தீர்ப்பதற்கு மிகச் சிறப்பாக மருந்தாகச் செயல்படுகிறது. குறிப்பாக வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது நம்முடைய செரிமான மண்டலத்தைச் சுத்தப்படுத்தி, மலச்சிக்கலைப் போக்க உதவும்.Next Story
Share it