1. Home
  2. ஆரோக்கியம்

நடுராத்திரியில் பசி வந்தால் என்ன செய்வது?

நடுராத்திரியில் பசி வந்தால் என்ன செய்வது?

இரவு நேரத்தில் திடீரென பசி எடுக்கிறதா..? அப்போ இது உங்களுக்கான பதிவு தான்

பொதுவாக நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயாளிகளுக்கு நடுராத்திரியில் பசியெடுக்க வாய்ப்புள்ளது. மாத்திரை, மருந்தை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் இதுபோன்று பசி எடுக்கும். அப்படிப்பட்ட சமயத்தில் ஓட்ஸ் மீல் சாப்பிடலாம். அதில் நார்ச்சத்து தவிர வேறு ஊட்டச்சத்துகள் இருக்காது என்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடாது. காலை வரை பசியெடுக்காது.

இரவு படுக்கப்போகுமுன் சிலர் சரியாக சாப்பிட்டிருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நடுராத்திரியில் பசியினால் முழித்துக் கொண்டு விடுவார்கள். பசியைத் தீர்ப்பதற்கு அவித்த முட்டைகள் துண்டுகளாக்கி மிளகு, உப்பு சேர்த்து சாப்பிட்டால் காலைக்குள் ஜீரணமாகிவிடும். இரவுத் தூக்கமும் கெடாது.

பட்டர்ஃப்ரூட் எனப்படும் அவக்கேடோ பழத்தை பால் சேர்த்து ஸ்மூத்தி செய்து குடித்தால் வயிறு நிரம்பும். மீண்டும் நிம்மதியாக உறங்கலாம்.

சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் பாப்கார்ன் சாப்பிட்டு வயிற்றை நிரப்பினால் தூக்கம் வரும். சர்க்கரை அளவு மீறாது.

சிலருக்கு அல்சர் காரணமாக ஏற்படும் வலியினால் அர்த்தராத்திரியில் திடீரென்று எழுந்து கொள்வர். பசியும் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் இனிப்புத் தயிரில் மாதுளை முத்துக்கள், திராட்சைகள், ஃப்ரீனி சேர்த்து சாப்பிட்டால் இதமாக இருக்கும். தூக்கமும் வந்துவிடும்.

நெஞ்செரிச்சல், சர்க்கரைநோய் தொந்தரவு இருப்பவர்கள் பெரும்பாலும் காரம் நிறைந்த உணவுகளை இரவில் தவிர்த்தால் தூக்கம் கலையாது. அப்படி நேர்ந்தால் பச்சைக் காய்கறிகளை சாலட்டுகளாக சாப்பிடுவது நல்லது.

சிலருக்கு பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடப் பிடிக்காது . அப்படிப்பட்டவர்கள் பாவக்காய், கோவைக்காய், கேரட், பச்சைப் பட்டாணி, அவரைக்காய் போன்றவற்றை மைக்ரோ அவன் அல்லது டவாவில் வறுத்து சிறிது உப்பு மிளகு சேர்த்து டப்பாவில் அடைத்து வைக்கலாம். இரவுப் பசியின்போது எடுத்து சாப்பிடலாம்.

உடல் பருமன் கொண்டவர்கள் இரவில் பசியினால் விழித்துக் கொண்டால் சாப்பிட்டு இன்னும் எடை கூடிவிடும் என்று பயந்தால் கைவசம் எப்போதும் பூசணி விதைகளை வறுத்து உப்பு சேர்த்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். இதுபோன்று அர்த்த ராத்திரியில் பசியெடுத்தால் இந்தப் பூசணி விதைகளை சாப்பிட்டால் சுவையாகவும் வயிறு நிரம்பவும் செய்யும்.

எந்தவித நோயோ அல்லது உடல் கோளாறுகளோ அல்லாதவர்கள் ராத்திரியில் பசியினால் விழித்துக் கொண்டால் வாழைப்பழத்தையும் நிலக்கடலை பட்டரையும் கலந்து சாப்பிட்டால் தெம்பாக இருக்கும். தூக்கம் வந்துவிடும்.

பாதாம், பிஸ்தா, வால்நட், முந்திரி பருப்புகளை வறுத்து மிளகு, உப்பு சேர்த்து பாட்டிலில் வைத்தால் அதை கையளவு சாப்பிட்டால் பசி பறந்துபோகும். நிம்மதியான உறக்கம் வரும்.

Trending News

Latest News

You May Like