1. Home
  2. ஆரோக்கியம்

ஓமத்தண்ணீர் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள்...!!

ஓமத்தண்ணீர் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள்...!!

நாமெல்லாம் சிறு வயதில் வயிற்று வலி ஏற்பட்டால், அருகில் உள்ள பலசரக்கு கடைகளில் 25 பைசாவுக்கு ஓமத்தண்ணீர் வாங்கி குடித்து விட்டு பையை மாட்டிக் கொண்டு பள்ளிக்கூடம் ஓடுவோம்.ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஓமத்தையே மறந்து விட்டோம். வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் போன்ற வயிறு சம்பந்தமான எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஓமம் கைகண்ட மருந்து.

சிறிதளவு ஓமத்துடன்,கல்உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட உடனே சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும்.ஓம எண்ணெய்யும் மூட்டு வலிக்கு அருமருந்து. இதனை தேய்த்து லேசாக மசாஜ் செய்தாலே போதும். மூட்டு வலி குணமாகும். ஓமத்தை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தொடர்ந்து குடித்து வர ஆஸ்துமா அண்டாது. சீரண சக்தி பெருகும்.


ஓமத்தண்ணீர் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள்...!!

ஓமம் போட்டு கொதிக்க வைத்த நீரில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை விட்டு மறுபடியும் கொதிக்க விட்டு அத்துடன் கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் தேய்த்து வர சுளுக்கு, இடுப்பு வலி நீங்கும்.

ஓமப் பொடியையும், கல் உப்பையும் மோரில் கலந்து குடித்தால், நெஞ்சுக் கபத்தை வெளியேற்றும். பல்வலிக்கும் இதே எண்ணெயைப் பஞ்சில் தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொள்ள பறந்தோடும்.

Trending News

Latest News

You May Like