மக்களே தெரிஞ்சிக்கோங்க..!! சளி,இருமலைத் துரத்தியடிக்கும் சூப்பர் சூப்!

நமது உடலில் உள்ள என்சைம்களைத் தூண்டவும், செரிமானப் பிரச்சனைகளை சரிசெய்யவும் சூப் உதவுகிறது. சளி, இருமல் மற்றும் அசிடிட்டி பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்து பசியைத் தூண்டவல்ல சூப்பை வீட்டிலேயே மிகச் சுலபமாக செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்
கற்பூரவல்லி இலை – 10
ஓமம் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1டீஸ்பூன்
தனியா – 2 டீஸ்பூன்
மிளகு – 5
சுக்குத்தூள் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 5பற்கள்
சோம்பு – 1/2டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – 1சிட்டிகை
வெற்றிலை – 2
நெய் – 2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை, ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத்தூள் இவற்றை மிதமான தீயில் வதக்கி கொள்ளவும்.இதனுடன் 400மிலி தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
பாதியாக வற்றியவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சூடாகப் பரிமாறலாம். இதில் உள்ள கற்பூரவல்லி இலை, வெற்றிலை இவை சளி, இருமலை சரி செய்ய உதவுகிறது. மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள சீரகம், ஓமம், பெருங்காயம் ஆகியவை வயிற்று பிரச்சனைகளை சீராக்குகிறது. இதனை வாரம் இருமுறை குடித்து வரலாம்.