1. Home
  2. ஆரோக்கியம்

தினமும் பப்பாளி தண்ணீரை குடித்து வந்தால்...

தினமும் பப்பாளி தண்ணீரை குடித்து வந்தால்...

பப்பாளி தண்ணீர் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. இந்த பப்பாளி தண்ணீரில் வைட்டமின்கள் அதிகம் நிரம்பியுள்ளது.பழுத்த பப்பாளி பழத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அதை ஆற வைத்து காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் குடித்து வரும் போது பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உங்களுடைய உடலுக்கு கிடைக்கிறது.

இதில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளது. உங்களுடைய செரிமானத்தை சீராக்குகிறது. பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படக்கூடிய வலியை நீக்குகிறது. சிறுநீரகங்களை பாதுகாக்கிறது. ஒற்றைத்தலைவலி பிரச்சினையை குறைக்கிறது. கீழ் வாதத்திற்கு உதவுகிறது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த பப்பாளி தண்ணீரை அதிகாலையில் குடித்து வரலாம். இது உங்களுடைய குடலில் இருக்கக்கூடிய நச்சுக்களை சுத்தப்படுத்தவும் அதை உடலிலிருந்து வெளியேற்றவும் உதவுகிறது.


தினமும் பப்பாளி தண்ணீரை குடித்து வந்தால்...

இந்த பப்பாளி பழ தண்ணீரை பப்பாளிப்பழ துண்டுகள் சேர்த்து சாப்பிட வேண்டும். இது அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை உள்ளடக்கி உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த தண்ணீரில் பாப்பைன் என்ற என்சைம் இருக்கிறது. இது குடலுக்கு நல்லது. குடலில் இருக்கக்கூடிய நச்சுகளை நீக்குகிறது.

இதில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. பப்பாளி துண்டுகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அதன் பின்னர் அதை நீங்கள் சாப்பிடும் பொழுது வைட்டமின் சி உங்களுடைய உடலுக்கு அதிக அளவில் கிடைக்கும். இந்த வைட்டமின் தண்ணீரில் அதிக அளவு வெளியேறுகிறது. இது ஆன்டிஆக்சிடென்ட்டை அதிகரித்து கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பல்வேறு நோய்களுக்கு எதிராக போராடுகிறது.


தினமும் பப்பாளி தண்ணீரை குடித்து வந்தால்...

இதில் பீட்டா கரோட்டின் அதிக அளவில் உள்ளது. மேலும் இதில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ கண் பார்வைக்கு அதிகம் உதவுகிறது.

மேலும் இதில் பாப்பைன் எனப்படும் புரோட்டீஸ் நொதி உள்ளது. இது நாம் சாப்பிடக்கூடிய புரதத்தை ஜீரணிக்க உதவுகிறது. இது வெப்பத்தை எதிர்க்கும் தன்மை கொண்டது. பப்பாளியை நாம் தண்ணீரில் கொதிக்க வைக்கும் போதெல்லாம் பாப்பைன் அப்படியே உள்ளது. இது சீரான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. வீக்கம், வாயு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்லது.

பப்பாளியில் உள்ள செரிமான நொதி வெப்பஎதிர்ப்புத் திறன் கொண்டதாக இருப்பதால் சைட்டோகைன்கள் வெளியிடப்படுகின்றன. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த தெர்மோ ஸ்டெபிலிட்டி மாதவிடாய் காலத்தில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.

இந்த பானத்தில் பைட்டோநியூட்ரியண்ட்ஸ், பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் இருப்பதால் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது பெருங்குடல், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

எப்படி செய்வது ?

இந்த பானத்தை நீங்கள் எளிதாகவே உங்களுடைய வீடுகளில் செய்யலாம். முதலில் பப்பாளியை தோல் உரித்து அதன் விதைகளை எடுத்து விட்டு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். இந்த துண்டுகளை சுமார் 5 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு இந்த தண்ணீரை அப்படியே எடுத்து ஆறவிடுங்கள். இந்த தண்ணீரை நீங்கள் தினமும் காலையில் தொடர்ந்து குடித்து வர வேண்டும்.

Trending News

Latest News

You May Like